• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்த உலகக்கோப்பையின் சூப்பர் ஸ்டார்.. மெஸ்ஸி, எமாலையே ஓரங்கட்டிய 3 வயது சிறுவன்! யாருங்க இது? | FIFA World Cup 2026: Who is the Keyne Yamal, the 3-Year-Old sensation of this season?

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்த உலகக்கோப்பையின் சூப்பர் ஸ்டார்.. மெஸ்ஸி, எமாலையே ஓரங்கட்டிய 3 வயது சிறுவன்! யாருங்க இது? | FIFA World Cup 2026: Who is the Keyne Yamal, the 3-Year-Old sensation of this season?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Sports

oi-Shyamsundar I

Time
Updated: Thursday, July 16, 2026, 15:52 [IST]

நியூயார்க்: உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நடப்பு சாம்பியன் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா, இளம் புயல் லமைன் எமாலின் ஸ்பெயின் இடையே இறுதிப்போட்டி நடக்க உள்ளது.

கால்பந்து வரலாற்றின் மிக முக்கியமான இறுதிப்போட்டிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஆனால், மைதானத்தில் மோதிக்கொள்ளும் இந்த வீரர்களை விட, தற்போது ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருப்பது வேறு ஒரு நபர். அவர் வேறு யாருமல்ல.. ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் லமைன் எமாலின் 3 வயது தம்பி கெய்ன் எமால்!

FIFA World Cup 2026

கால்பந்து மைதானத்தில் வீரர்கள் காட்டும் ஆட்டத்தை விட, கேலரியில் அமர்ந்துகொண்டு இந்த 3 வயது குழந்தை செய்த அட்ராசிட்டிகள் தான் சமூக வலைதளங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகக்கோப்பையின் வைரல் ஸ்டாராக அவரை மாற்றியுள்ளது.

பெல்ஜியம் அணிக்கு எதிரான விறுவிறுப்பான கால் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் மைதானத்தில் இருந்த பிரம்மாண்ட திரையில் கேலரியில் இருந்த கெய்ன் எமால் காண்பிக்கப்பட்டார். கேமராவைப் பார்த்ததும் சற்றும் பதற்றமடையாத அந்தச் சிறுவன், தன் நாக்கை நீட்டி விசித்திரமான முகபாவனைகளைச் செய்து குறும்புத்தனம் செய்யத் தொடங்கினான்.

மைதானத்தில் இருந்த லமைன் எமால் அண்ணாந்து பெரிய திரையைப் பார்த்தபோது, தன் தம்பியின் இந்தச் செய்கையைக் கண்டு மைதானத்திலேயே விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்.

இது குறித்து பின்னர் பேசிய எமால், “போட்டிக்கு முந்தைய நாள் நான் பிசியோதெரபியில் இருந்தபோது, என் அம்மாவின் மொபைலில் இருந்து கெய்ன் அழைத்தான். நாளைக்கு கேமரா என் பக்கம் திரும்பும்போது நான் நாக்கை நீட்டி உன்னைக் கேலி செய்யப் போகிறேன் என்று முன்பே கூறினான். அவன் சொன்னபடியே திரையில் செய்ததைப் பார்த்தபோது என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

சிறுவனின் வைரல் தருணங்கள்

உலகக்கோப்பை தொடர் தொடங்கியது முதலே கெய்னின் ஒவ்வொரு நகர்வும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் கோல் அடித்தபோது, இந்த 3 வயது சிறுவன் தன் இரு கைகளையும் காற்றில் உயர்த்தி உற்சாகமாகக் கத்திய வீடியோவை ஸ்பெயின் நாட்டு தூதரகமே தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியது. இது போல அவர் மைதானத்தில் செய்யும் எல்லா சேட்டைகளும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மைதானத்திற்கு வெளியே இந்த சிறுவன் செய்வதும் கூட மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து வருகிறது.

தன் தம்பி மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ள லமைன் எமால், கெய்ன் குறித்துப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். என் தம்பி தான் எனக்கு எல்லாமே. அவன் மீது நான் மிகுந்த அன்பு இருக்கிறேன். சில நேரங்களில் அவன் என் தம்பி என்பதை விட, என் சொந்த மகன் என்ற உணர்வே எனக்குள் ஏற்படும் என்று எமால் கூறியுள்ளார்.

வீழ்ந்தது போர்ச்சுகல்.. வீழ்த்தியது ரொனால்டோவின் சுயநலம்! 2026 உலகக்கோப்பையின் ஆகப்பெரும் துரோகம்

வீழ்ந்தது போர்ச்சுகல்.. வீழ்த்தியது ரொனால்டோவின் சுயநலம்! 2026 உலகக்கோப்பையின் ஆகப்பெரும் துரோகம்

வறுமையான பின்னணியில் இருந்து வந்த எமால், நான் வளர்ந்த வீட்டில் சமையலறையும் படுக்கையறையும் ஒரே இடத்தில் தான் இருக்கும். ஆனால் இன்று என் உழைப்பால் என் அம்மாவும், என் தம்பியும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் பெற நினைத்த அழகான குழந்தைப்பருவத்தை என் தம்பிக்கு என்னால் தர முடிகிறது. அதுவே எனக்குப் போதும்” என்று தனது குடும்பம் பற்றி அவர் பேசி உள்ளார்.

நியூ ஜெர்சி மைதானத்தில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில், அண்ணன் எமாலுக்காகவும், ஸ்பெயின் அணிக்காகவும் கெய்ன் கேலரியில் இருந்து என்ன அட்ராசிட்டி செய்யப்போகிறார் என்பதைப் பார்க்கவே ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

English summary

FIFA World Cup 2026: Who is the Keyne Yamal, the 3-Year-Old sensation of this season?

Read More

Previous Post

யாழில் ஏமாற்றப்பட்ட நபர்கள்! கனடா அனுப்புவதாக 8 மில்லியனை சுருட்டிய நபர்

Next Post

ஆடி வெள்ளி பூக்களுக்கு செம்ம டிமாண்ட்… குண்டு மல்லி ரூ.600, ஜாதி மல்லி ரூ.850 விற்பனை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Next Post
ஆடி வெள்ளி பூக்களுக்கு செம்ம டிமாண்ட்… குண்டு மல்லி ரூ.600, ஜாதி மல்லி ரூ.850 விற்பனை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

ஆடி வெள்ளி பூக்களுக்கு செம்ம டிமாண்ட்... குண்டு மல்லி ரூ.600, ஜாதி மல்லி ரூ.850 விற்பனை | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin