• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கட்டுநாயக்கவில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: முன்னாள் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கட்டுநாயக்கவில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: முன்னாள் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
கட்டுநாயக்கவில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: முன்னாள் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது

பிடிபட்ட சந்தேகநபர், பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார். பின்னர், அங்கு வந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அந்த வழியே சென்ற ஒருவரின் மோட்டார் சைக்கிளைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

கட்டுநாயக்க பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சிவில் பாதுகாப்புப் படையின் முன்னாள் வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய இந்த நபர், திவுலபிட்டியவில் வைத்து நீர்கொழும்புப் பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 31 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (15) பிற்பகல் கட்டுநாயக்க பகுதியில் போக்குவரத்து பொலிஸார் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தபோது, அதனைப் பொருட்படுத்தாமல் சந்தேகநபர்கள் தப்பியோடினர். தேவமொட்டாவ பகுதியில் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டு, அவர்கள் ஓடியபோது, பொலிஸார் ஒருவரைப் பிடித்தனர்.

பிடிபட்ட சந்தேகநபர், பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார். பின்னர், அங்கு வந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அந்த வழியே சென்ற ஒருவரின் மோட்டார் சைக்கிளைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

சந்தேகநபர் தப்பிச் செல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் பொலிஸாரிடமிருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கி ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் 2008 முதல் 2010 வரை கட்டுநாயக்க நகர பாதுகாப்புப் பிரிவில் சிவில் பாதுகாப்பு படை வீரராகப் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

கருப்பு ஆடுகளை களை எடுக்கும் விஜய்.. கோட்டைக்குள் வேட்டை! IAS அதிகாரிகளை தூக்கியது ஏன்? | Why did Tamil Nadu CM Vijay transfer Top IAS official out of their positions all of a sudden?

Next Post

ஜப்பானில் கடும் வெப்பம்.. அரசு ஊழியர்கள் டீ ஷர்ட், டவுசர் அணியலாம்.. அரசு அதிரடி அறிவிப்பு.! | World News (உலக செய்திகள்)

Next Post
ஜப்பானில் கடும் வெப்பம்.. அரசு ஊழியர்கள் டீ ஷர்ட், டவுசர் அணியலாம்.. அரசு அதிரடி அறிவிப்பு.! | World News (உலக செய்திகள்)

ஜப்பானில் கடும் வெப்பம்.. அரசு ஊழியர்கள் டீ ஷர்ட், டவுசர் அணியலாம்.. அரசு அதிரடி அறிவிப்பு.! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin