Last Updated:
நேர்த்தியான உடையணிவதில் பெயர் போன ஜப்பானில் அரசு அலுவலர்கள் டீ சர்ட், டவுசர் அணிந்து அலுவலகம் வரலாம் என அரசு அறிவித்து இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானில் வெயிலின் தாக்கத்தை குறைக்க அரசு ஊழியர்கள் டீ சர்ட் மற்றும் டவுசர் அணிந்து அலுவலகம் வரலாம் என்ற அரசின் அறிவிப்பு கவனம் ஈர்த்துள்ளது.
ஜப்பானில் கடும் வெப்ப அலை வீசி வரும் நிலையில் ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பொது மக்கள் கடும் வெயிலில் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெயிலின் கொடுமையை சமாளிக்க அலுவலகம் வரும் அரசு ஊழியர்கள் டீ சர்ட், ஷார்ட்ஸ், ஸ்னீக்கர்ஸ் உள்ளிட்ட இலகுரக ஆடைகளை அணிந்து வரலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. நேர்த்தியான உடையணிவதில் பெயர் போன ஜப்பானில் அரசு அலுவலர்கள் டீ சர்ட், டவுசர் அணிந்து அலுவலகம் வரலாம் என அரசு அறிவித்து இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானில் கடும் வெப்பம்.. அரசு ஊழியர்கள் டீ ஷர்ட், டவுசர் அணியலாம்.. அரசு அதிரடி அறிவிப்பு.!


