• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

லட்சுமி அம்மாள் என்னும் லமின் யமால்! பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயினை ஃபைனலுக்கு தூக்கிய இளம் புயல்! யார்? | Who is Lamine Yamal? How did he help Spain win the match against France?

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
லட்சுமி அம்மாள் என்னும் லமின் யமால்! பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயினை ஃபைனலுக்கு தூக்கிய இளம் புயல்! யார்? | Who is Lamine Yamal? How did he help Spain win the match against France?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Sports

oi-Shyamsundar I

Time
Updated: Wednesday, July 15, 2026, 10:18 [IST]

நியூயார்க்: தமிழ்நாடு முழுக்க லட்சுமி அம்மாள் என்ற பெயர் கடந்த சில நாட்களாக பிரபலம்.. காரணம் டீ ஷர்ட் விற்கும் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் லமின் யமால் என்ற பெயரை லட்சுமி அம்மாள் கூறியது பெரிய அளவில் ட்ரெண்டானது. அவர் பல கால்பந்து வீரர்களின் பெயரை மாற்றி மாற்றி உச்சரித்தது பெரிய அளவில் டிரெண்டாகி அவரின் கடையும் ஹிட் அடித்தது.. அந்த லட்சுமி அம்மாள் எனப்படும் லமின் யமால்தான் இந்த கால்பந்து உலகக்கோப்பையின் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்!

டல்லாஸ் மைதானத்தில் நேற்று நடந்த ஃபிபா உலகக்கோப்பை 2026 தொடரின் முதலாவது பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வென்றது. பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது.

spain FIFA World Cup 2026 Lionel Messi 2026

இந்த வரலாற்று வெற்றிக்கு பின்னால்.. கோல் அடிக்காவிட்டாலும், ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஸ்பெயினின் 19 வயது இளம் நட்சத்திரம் லமின் யமால் காரணமாக உருவெடுத்துள்ளார்!

நேற்று நடந்த போட்டியில் யமாலின் மேஜிக்:

நேற்று கோல் அடிக்க ஸ்பெயினுக்கு முக்கிய வாய்ப்பு லமின் யமால் மூலம்தான் கிடைத்தது. போட்டியின் 22வது நிமிடத்தில் பிரான்ஸ் பாக்ஸிற்குள் பந்தை எடுத்து செல்ல முயன்ற யமாலின் வேகத்தை தடுக்க முடியாமல் பிரான்ஸ் வீரர் லூகாஸ் டிக்னே அவரை ஃபவுல் செய்தார்.

இதனால் ஸ்பெயினுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மிக்கேல் ஓயார்சபால் துல்லியமாக கோலாக மாற்றினார். இதன் மூலம் ஆட்டத்தின் போக்கை ஸ்பெயின் பக்கம் திருப்பினார் யமால். 19 வயது மட்டுமே நிரம்பிய இந்த இளம் புயல் களமிறங்கிய 12 முக்கிய சர்வதேச போட்டிகளிலும் ஸ்பெயின் அணி தொடர் வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமையின் பிடியில்: யமாலின் பின்னணி

இன்று கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் யமாலின் ஆரம்பகால வாழ்க்கை அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. 2007ல் பார்சிலோனாவின் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். அவர் பிறந்த ஏரியாவே ஏழைகள் வாழும் ஏரியா!

அங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத, வறுமை சூழ்ந்த சூழலில் தான் யமால் வளர்ந்தார். தெருக்களில் கான்கிரீட் தரைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை உதைத்து கால்பந்து விளையாட பழகியவர் அவர். தன் மகன் எப்படியாவது வறுமையில் இருந்து மீள வேண்டும் என்ற பெற்றோரின் கனவும், யமாலின் அசுர உழைப்பும் தான் அவருக்கு வாய்ப்புகளை தேடி தேடி தந்தது. அவரின் சிறப்பான உள்ளூர் லீக் ஆட்டங்களை பார்த்த கால்பந்து தேர்வாளர்கள் மூலம் அவருக்கு லா மாசியா எனப்படும் பார்சிலோனா கால்பந்து அகாடமிக்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

மெஸ்ஸி தொட்ட மேஜிக் தருணம்!

மெஸ்ஸியின் அந்த தொடுதல் யமாலின் வாழ்வில் ஒரு தீர்க்கதரிசனம் போல பலித்துள்ளது என்றே கூற வேண்டும்.

தன்னுடைய 15வது வயதிலேயே பார்சிலோனா சீனியர் அணிக்காக களமிறங்கி, லா லிகாவில் விளையாடிய மிக இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். கடந்த யூரோ 2024 தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிராக லாங்-ரேஞ்ச் கோல் அடித்து ஒட்டுமொத்த உலகையும் தன் பக்கம் திருப்பிய யமால், ஸ்பெயின் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் பயங்கர வைரலானது. 2007ஆம் ஆண்டு, பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஒரு தொண்டு நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஒரு சிறிய தொட்டியில் இருந்த குழந்தையை குளிப்பாட்டி, அந்த குழந்தையை கைகளில் ஏந்தியிருப்பார். அந்த குழந்தை வேறு யாருமல்ல, அதுதான் இன்றைய இளம் சூப்பர் ஸ்டார் யமால்!

மெஸ்ஸி தன் கைகளால் ஆசீர்வதித்த அந்த குழந்தை, இன்று மெஸ்ஸியின் சாதனைகளையே முறியடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது என நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தற்போது நடந்து வரும் 2026 ஃபிபா உலகக்கோப்பையிலும் தனது 19வது வயதில் ஸ்பெயின் அணியின் முதுகெலும்பாக உருவெடுத்துள்ளார். வறுமையின் பிடியில் இருந்து, தெருக்களில் விளையாடி, இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை ஸ்பெயின் அணியை கொண்டு சென்றுள்ள யமாலின் இந்த அசுர வளர்ச்சி, உலகெங்கிலும் உள்ள ஏழை மற்றும் இளம் கால்பந்து வீரர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகம் என்பதில் சந்தேகமே இல்லை!

English summary

Who is Lamine Yamal? How did he help Spain win the match against France?

Read More

Previous Post

Tamilmirror Online || ’இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்’

Next Post

Free.. வெறும் 4 மணி நேரத்தில் AI Expert ஆகிடலாம்.. அரசு சர்டிபிகேட் உடன் பொன்னான வாய்ப்பு! | YUVA AI: Government of India Offers Free AI Online Course with Certificate: Check Eligibility and How to Apply

Next Post
Free.. வெறும் 4 மணி நேரத்தில் AI Expert ஆகிடலாம்.. அரசு சர்டிபிகேட் உடன் பொன்னான வாய்ப்பு! | YUVA AI: Government of India Offers Free AI Online Course with Certificate: Check Eligibility and How to Apply

Free.. வெறும் 4 மணி நேரத்தில் AI Expert ஆகிடலாம்.. அரசு சர்டிபிகேட் உடன் பொன்னான வாய்ப்பு! | YUVA AI: Government of India Offers Free AI Online Course with Certificate: Check Eligibility and How to Apply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin