Tamilnadu
oi-Halley Karthik
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி விசாரணை கைதி சபரிவர்மன் என்பவர், மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த திமுக எம்பி கனிமொழி, யாரை காப்பாற்ற சக கைதிகள் மீது வழக்கு? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சுசீந்தரம் அடுத்த ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர்தான் இந்த சபரிவர்மன். மாற்றுத்திறனாளியான இவர், தனது வீட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

ஆனால், கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றதாக கூறி, கடந்த ஜூலை.9ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, ஜூலை 12ம் தேதி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மரணமடைந்திருக்கிறார். இந்த மரணம் தொடர்பாக சிறையில் இருந்த நீண்ட நாள் கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தான் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியிருக்கிறார்.


