• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொடர்ந்து எகிறும் விலைவாசி! இனி தக்காளி இல்லாம தான் குழம்பு வைக்கணும்! ஷாக் கொடுக்கும் ஜூன் மாத பணவீக்கம்! | Retail Inflation in June: Which Became Costlier and Which Got Cheaper?

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தொடர்ந்து எகிறும் விலைவாசி! இனி தக்காளி இல்லாம தான் குழம்பு வைக்கணும்! ஷாக் கொடுக்கும் ஜூன் மாத பணவீக்கம்! | Retail Inflation in June: Which Became Costlier and Which Got Cheaper?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்ந்து எகிறும் விலைவாசி! இனி தக்காளி இல்லாம தான் குழம்பு வைக்கணும்! ஷாக் கொடுக்கும் ஜூன் மாத பணவீக்கம்!

சில காலமாகவே சாமானியர்களின் சம்பளம் அதிகரிக்கவில்லை. ஆனால் விலைவாசி மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எப்போதெல்லாம் மொத்தவிலை பணவீக்கம் அதிகரிக்கிறதோ? அப்போதெல்லாம் சில்லறை பணவீக்கமும் அதிகரிக்கும். அந்த வகையில் கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை பணவீக்க விகிதம் 4.38 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் விகிதம் குறித்த கணிப்புகளை வெளியிடும். இந்நிலையில் பல மாதங்களாக 4 சதவீதத்திற்கு மேல் உயராமல் இருந்த விகிதம், தற்போது முதல்முறையாக 4.38 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு சாமானியர்களை வாட்டி வதைக்கிறது. ஜூன் மாதத்தில் வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் உணவுப் பொருட்களில் தக்காளி, இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரித்திருக்கிறது. அதே நேரம் சில பொருட்களின் விலை குறைந்தும் இருக்கிறது.

பணவீக்கம் என்றால் என்ன?: எளிமையாக சொல்ல வேண்டுமானால் விலைவாசி உயர்வு தான் பணவீக்கம். உதாரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் 100 ரூபாயை வைத்து வாங்கிய பொருட்களை நினைவில் கொள்ளுங்கள். இன்று அந்த 100 ரூபாய்க்கு பாதி பொருட்களை கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு மூலப்பொருட்களின் விலை அதிகரித்து இறுதியில் அவை மக்களை வந்தடையும்போது விலை உயர்கிறது.

தொடர்ந்து எகிறும் விலைவாசி! இனி தக்காளி இல்லாம தான் குழம்பு வைக்கணும்! ஷாக்  கொடுக்கும் ஜூன் மாத பணவீக்கம்!

ஜூன் மாதத்தில் மட்டும் வெள்ளி விலை மிகப்பெரிய அதிகரிப்பை கண்டது. இதனால் வெள்ளி நகைகளின் பணவீக்க விகிதம் 133 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின நகைகளின் பணவீக்க விகிதம் 36.82 சதவீதமாக உள்ளது.

உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. இஞ்சி 50.41 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. இது பருவ கால பயிர் என்பதால் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலை உயர்வுக்கு காரணமானது. தக்காளி விலை 31.92% வரை அதிகரித்துள்ளது. உணவகங்கள் மற்றும் தங்கும் இடங்களின் விலையிலும் அதிகரிப்பு தென்படுகிறது. அதேபோல உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலை 5.05% அதிகரித்திருக்கிறது. ஆனால் ஒரு சில பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. உருளைக்கிழங்கு 20.34%, பட்டாணி 9.67%, சீரகம் 3.75% குறைந்துள்ளது.

ஆக ஜூன் மாத பணவீக்க உயர்வு தற்காலிகமானதா? அல்லது நீண்ட காலத்திற்கு இதே நிலை தொடருமா? என்பதை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கை கூட்டத்தின் முடிவுகள் தான் தீர்மானிக்கும்.

Share This Article

Story first published: Wednesday, July 15, 2026, 18:09 [IST]

Other articles published on Jul 15, 2026

Read More

Previous Post

யாரை காப்பாற்ற சக கைதிகள் மீது வழக்கு? நாகர்கோவில் காவல் மரணம் குறித்து கனிமொழி எம்பி சரமாரி கேள்வி! | Whom Are You Protecting? Kanimozhi MP Raises Questions Over Nagercoil Custodial Death

Next Post

நமக்குத் துரோகம் செய்த முன்னாள் பெர்சத்து தலைவர்களுடன் இணைந்து செயல்பட மாட்டோம்; பெர்லிஸ் பாஸ் | Makkal Osai

Next Post
நமக்குத் துரோகம் செய்த முன்னாள் பெர்சத்து தலைவர்களுடன் இணைந்து செயல்பட மாட்டோம்; பெர்லிஸ் பாஸ் | Makkal Osai

நமக்குத் துரோகம் செய்த முன்னாள் பெர்சத்து தலைவர்களுடன் இணைந்து செயல்பட மாட்டோம்; பெர்லிஸ் பாஸ் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin