• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

CBSE புதிய அறிவிப்பு: 10ஆம் வகுப்பு சான்றிதழ் பெற மூன்றாவது மொழி தேர்ச்சி கட்டாயம்.. | CBSE 2027–28 Rule Change: Class 10 Pass Certificate Requires Third-Language Assessment

GenevaTimes by GenevaTimes
July 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
CBSE புதிய அறிவிப்பு: 10ஆம் வகுப்பு சான்றிதழ் பெற மூன்றாவது மொழி தேர்ச்சி கட்டாயம்.. | CBSE 2027–28 Rule Change: Class 10 Pass Certificate Requires Third-Language Assessment
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


CBSE புதிய அறிவிப்பு: 10ஆம் வகுப்பு சான்றிதழ் பெற மூன்றாவது மொழி தேர்ச்சி கட்டாயம்..

CBSE எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் தான் இந்தியாவில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிபிஎஸ்இ அமைப்பு தேசிய கல்விக் கொள்கையை முழுவதுமாக நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது. தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியான மும்மொழி கொள்கையை அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் கட்டாயமாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மூன்றாம் மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த புதிய விதிமுறை 2027-28 கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

CBSE புதிய அறிவிப்பு: 10ஆம் வகுப்பு சான்றிதழ் பெற மூன்றாவது மொழி தேர்ச்சி கட்டாயம்..

அதாவது இந்த கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு மூன்றாவது மொழி கட்டாயம். இந்த மூன்றாம் மொழி 10-ஆம் வகுப்பு பொது தேர்வு பாடங்களில் ஒன்றாக இருக்காது. அதாவது, போர்டு எக்ஸாமில் இது பேப்பராக இருக்காது. ஆனால் மூன்றாம் மொழிக்கான தேர்வு, அந்தந்த பள்ளிகளிலேயே உள்நிலை தேர்வாக நடத்தப்படும்.

இந்த உள்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் கிடைக்காது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஒருவேளை மாணவர்கள் முதல் முயற்சியில் மூன்றாம் மொழி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, அந்த மாணவருக்கு மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்த பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

தற்போது 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. அவர்கள் பழைய முறையிலேயே தேர்வுகளை எழுதுவார்கள். ஆனால் இந்த 9ஆம் வகுப்பு பயின்று அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மூன்றாம் மொழி கட்டாயமாகிறது என்பதால் மாணவர்களும் பெற்றோரும் அதற்கு தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மூன்றாவது மொழி உள்நிலை தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஒரு வேளை அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் 10ஆம் வகுப்புக்கு செல்வார்கள். ஆனால் 10ஆம் வகுப்பு படித்து முடிப்பதற்குள் 9ஆம் வகுப்புக்கான மூன்றாவது மொழி உள்நிலை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ-இன் புதிய விதிப்படி, மாணவர்கள் கற்கும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை மாணவர்கள் பன்மொழித் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காகவும் மும்மொழி கொள்கை கட்டாயம் என்கிறது.

Share This Article

English summary

CBSE 2027–28 Rule Change: Class 10 Pass Certificate Requires Third-Language Assessment

CBSE முக்கிய அறிவிப்பு: 10ஆம் வகுப்பு சான்றிதழ் பெற மாணவர்களுக்கு மூன்றாவது மொழி தேர்ச்சி கட்டாயம்.. – CBSE has announced that from the 2027–28 academic year Class 10 students must complete and pass the third-language assessment to receive their pass certificate. The move affects school curricula, exam preparation, and certificate eligibility across India.

Story first published: Tuesday, July 14, 2026, 15:42 [IST]

Other articles published on Jul 14, 2026

Read More

Previous Post

தாக்குதலில் இந்தியர் பலி : ஈரான் துணை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நெகிரி செம்பிலான் மாநில அரசைக் கைப்பற்ற பெரிக்காத்தான் இலக்கு – Malaysiakini

Next Post

நெகிரி செம்பிலான் மாநில அரசைக் கைப்பற்ற பெரிக்காத்தான் இலக்கு – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin