• Login
Tuesday, July 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தாக்குதலில் இந்தியர் பலி : ஈரான் துணை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 14, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தாக்குதலில் இந்தியர் பலி : ஈரான் துணை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 14, 2026 3:23 PM IST

சர்வதேச கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள், அப்பாவி மாலுமிகளை குறிவைக்கும் வன்முறைச் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்

ஹார்முஸ் நீரிணை பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, ஈரான் தூதரை நேரில் வரவழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், உலகளவில் எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோஸ்முஸ் நீரிணையையும் மூடியது.

இந்த நீரிணை வழியாக செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது. இந்நிலையில், ஓமன் கடல் எல்லையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி கட்டிய மொம்பாசா மற்றும் பஹியா என்ற இரண்டு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இதில், இரண்டு கப்பல்களிலும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

இந்த தாக்குதலில் மொம்பாசா கப்பலில் பணியாற்றிய இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். ஆறு இந்தியர்கள், இரண்டு உக்ரைன் நாட்டு ஊழியர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலை சர்வதேச சட்ட விதிமீறல் என்று கண்டித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், தேசிய நலன்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கவும் தங்களுக்கு உரிமை உள்ளதாக எச்சரித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, புதுதில்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் துணைத் தூதர் (Deputy Chief of Mission) உடனடியாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் நேரில் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டு, இந்தியாவின் மிகக் கடுமையான கண்டனம் மற்றும் எதிர்ப்புப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கடல் பகுதியில் வணிகக் கப்பல்களையும், அப்பாவி மாலுமிகளையும் இலக்கு வைக்கும் இத்தகைய வன்முறைச் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா – ஈரான் போரால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரே பேரல் கச்சா எண்ணெய் விலை 81 டாலரை கடந்துள்ளது.

Read More

Previous Post

Tamilmirror Online || 5,386 ’சாம்பூ’ பக்கெட்டுகள் மீட்பு

Next Post

CBSE புதிய அறிவிப்பு: 10ஆம் வகுப்பு சான்றிதழ் பெற மூன்றாவது மொழி தேர்ச்சி கட்டாயம்.. | CBSE 2027–28 Rule Change: Class 10 Pass Certificate Requires Third-Language Assessment

Next Post
CBSE புதிய அறிவிப்பு: 10ஆம் வகுப்பு சான்றிதழ் பெற மூன்றாவது மொழி தேர்ச்சி கட்டாயம்.. | CBSE 2027–28 Rule Change: Class 10 Pass Certificate Requires Third-Language Assessment

CBSE புதிய அறிவிப்பு: 10ஆம் வகுப்பு சான்றிதழ் பெற மூன்றாவது மொழி தேர்ச்சி கட்டாயம்.. | CBSE 2027–28 Rule Change: Class 10 Pass Certificate Requires Third-Language Assessment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin