Last Updated:
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வடக்கு ரயில்வே, டெல்லியிலிருந்து மும்பைக்கு ஜூலை 10 ஆம் தேதி இயக்கப்பட்ட பச்சிம் ரயிலில், ஐஆர்சிடிசி மூலம் 3 லட்ச ரூபாய்க்கு முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு பெட்டியில் பூஜை நடைபெற்றதாக கூறியுள்ளது.
ரயில்வே பெட்டி ஒன்று சமீபத்தில் தேனிலவு அறை போன்று மாற்றப்பட்ட சம்பவத்தின் வடு மறைவதற்குள், மற்றொரு ரயில்வே பெட்டி பூஜை அறையாக மாற்றப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியை ‘தேனிலவு அறை’ போல மாற்றிய விவகாரத்தில், அலங்காரம் செய்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியிலிருந்து மும்பை சென்ற ரயிலில், சிறப்பு பெட்டி ஒன்று பூஜை அறையாக மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வடக்கு ரயில்வே, டெல்லியிலிருந்து மும்பைக்கு ஜூலை 10 ஆம் தேதி இயக்கப்பட்ட பச்சிம் ரயிலில், ஐஆர்சிடிசி மூலம் 3 லட்ச ரூபாய்க்கு முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு பெட்டியில் பூஜை நடைபெற்றதாக கூறியுள்ளது.
உரிய நேரத்தில் ரயிலை இயக்குதல், பாதுகாப்பு, பயணிகளின் வசதி ஆகியவற்றில் ரயில்வே நிர்வாகம் எவ்வித சமரசமும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை எனவும் வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.