நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில் நேற்று (13-07-2026) ஒருவரும் மற்றும் இன்று காலை (14-07-2026) ஒருவரும் உயிரிழந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைத்துறை அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறை அதிகாரிகள்
இதனடிப்படையில், நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.

ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற சிறைக்கலவரங்களில் மேலும் 21 கைதிகள் உயிரிழந்ததாகவும் இதன்மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோதலில் காயமடைந்த மற்ற சிறைக் கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் நீர்கொழும்பு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

