கொழும்பு ரேணுகா விடுதியில் இன்று பிற்பகல் தமிழ்பேசும் ஆறு முக்கிய அரசியல் கட்சிகள், ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்துவது இன்றைய அரசியல் ஸ்பெசல் செய்தி.
தமிழ் பேசும் மக்களின் பொதுவான அரசியல் கோரிக்கைகளும் நாட்டின் தற்போதைய தேசிய அரசியல் நிலைமையும் இந்த சந்திப்பின் முக்கிய அஜென்டாவாக இருந்தது.
ஆனால் இன்று இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த சிறிதரன் மனோகணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கடந்தமாத இறுதி மற்றும் இந்தமாதத்தில் தனித்தனியாக இந்தியாவுக்கு சென்று திரும்பியமை அவதானிக்கத்தக்க ஒருவிடயம்.
அப்படியானால் அனுர அரசாங்கம் மசியாமல் இருக்கும் நிலையில் தமிழ் பேசும் மக்களின் பொதுவான அரசியல் கோரிக்கை என்ற பழைய சுருதியில் புதிய பாட்டுகளை பாடும் முனைப்புகளை பெரியண்ணரான இந்தியா எடுக்கின்றதா? என்ற ஊகங்கள் உள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

