• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெறும் 4 நாட்களில் 40% லாபம்.. கல்யாண் ஜுவல்லர்ஸின் “இந்த” சீக்ரெட் பற்றி உங்களுக்கு தெரியுமா | Kalyan Jewellers Shares Surge 40% in 5 Days: What’s Fueling the Massive Rally? Experts answers

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வெறும் 4 நாட்களில் 40% லாபம்.. கல்யாண் ஜுவல்லர்ஸின் “இந்த” சீக்ரெட் பற்றி உங்களுக்கு தெரியுமா | Kalyan Jewellers Shares Surge 40% in 5 Days: What’s Fueling the Massive Rally? Experts answers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Vigneshkumar

Time
Updated: Monday, July 13, 2026, 17:48 [IST]

மும்பை: இந்தியாவில் இருக்கும் முக்கிய நகைக்கடைகளில் ஒன்றான கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குச்சந்தைகளில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் 40% வரை உயர்ந்துள்ளது. இது இவ்வளவு தூரம் உயர என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதுமே தனி மவுசு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே தங்க நகைகளை விற்கும் பெரும்பாலான நிறுவனங்கள் எப்போதுமே லாபத்தில் இருக்கும். அப்படி சமீப காலமாக பங்குச்சந்தையில் சிறப்பாக இருக்கும் ஒரு நிறுவனம் தான் கல்யாண் ஜுவல்லர்ஸ்.

Kalyan Jewellers India stocks

கல்யாண் ஜுவல்லர்ஸ்

கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஏறுமுகத்திலேயே வர்த்தகமானது.. இன்றைய தினம் மும்பை பங்குச்சந்தையில் 4.53% வரை உயர்ந்து கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் ரூ.497.85 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகும் தொடர்ந்து உயர்ந்த கல்யாண் ஜுவல்லர்ஸ் மும்பை பங்குச்சந்தையில் ரூ.510ல் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் சுமார் 40.27 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 4 நாட்களுக்கு முன்பு அதன் பங்கு ரூ.360 என்ற ரேஞ்சில் இருந்தது. இப்போது அது ரூ.500ஐ கடந்துவிட்டது. இந்த காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.41 சதவீதம் சரிந்த நிலையில், அதற்கு நேர்மாறாக கல்யாண் ஜுவல்லர்ஸ் ஏறி அடித்து வருகிறது. இப்போது பங்குச்சந்தை பலவீனமாக இருந்தபோதும், கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

டிசிஎஸ் நிறுவனத்தில் மிக பெரிய மாற்றம்.. எல்லாமே மாறி போச்சு பாருங்க! ரொம்ப முக்கியம்

டிசிஎஸ் நிறுவனத்தில் மிக பெரிய மாற்றம்.. எல்லாமே மாறி போச்சு பாருங்க! ரொம்ப முக்கியம்

காரணம்

கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தாண்டின் முதல் காலாண்டில் மிக சிறப்பாகச் செயல்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். அது குறித்து வரும் பாசிட்டிவ் தகவல்களும் சேர்ந்து கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகளை உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளன. குறிப்பாக சர்வதேச முதலீட்டு நிறுவனம் சிடி, கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குக்கு ரூ.750 வரை போகலாம் என சொல்கிறது. 2028 மார்ச் மாதத்திற்கான ஒருங்கிணைந்த வருவாய் கணிப்பின் இந்த கணிப்பை சிடி கொடுத்துள்ளது. நாட்டின் மற்றொரு முக்கிய தங்க நகை நிறுவனமான டைட்டனின் வேல்யூ உடன் ஒப்பிடும்போது இது சுமார் 25% குறைவான வேல்யூவில் கிடைப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு நடுவே அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்திருப்பதும் தங்கத்தின் மீதான முதலீட்டாளர் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழலில் முதலீட்டாளர்கள் எப்போதுமே பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேடி வருவது வழக்கம். இதுபோன்ற காலங்களில் தங்கம் சார்ந்து இருக்கும் அனைத்தின் விலையும் உயரவே செய்யும். அதன்படியே நகைக்கடைகளும் உயர்கிறது.

வருவாய் வளர்ச்சி

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் என்பது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 38 சதவீதம் உயர்ந்துள்ளது. கல்யாண் ஜுவல்லர்ஸ் இந்தியா மற்றும் வளைகுடாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதன் வருவாய் 38 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளது. திருமண சீசனில் அதன் விற்பனை 28 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சூழல்களால் தங்க இறக்குமதிக்கு கெடுபிடி இருக்கும் சூழலில், கடந்த மே மாதம் கல்யாண் ஜுவல்லர்ஸ் தங்க மறுசுழற்சி திட்டத்தை அறிவித்திருந்தது. அந்த திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இந்த காலாண்டு வருவாயில் மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கத்தின் பங்கு 46 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஜூன் மாதம் இது 55 சதவீதத்தையும் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

தங்கம் விலை சரியும்.. அடித்து சொல்லும் ஆனந்த் சீனிவாசன்.. அது சரி எவ்வளவு சரியும் தெரியுமா?

தங்கம் விலை சரியும்.. அடித்து சொல்லும் ஆனந்த் சீனிவாசன்.. அது சரி எவ்வளவு சரியும் தெரியுமா?

வெளிநாடுகள்

இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு கல்யாண் ஜுவல்லர்ஸ் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. அதன் சர்வதேச வருவாய் சுமார் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு சந்தையில் பதற்றம் இருந்தபோதும், அங்கு வருவாய் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்லாவற்றையும் விட கல்யாண் ஜுவல்லர்ஸின் ஆன்லைன் நகை விற்பனை தளத்தில் வருவாய் 112 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ள கூடாது. ஒரு பங்கின் கடந்த கால வளர்ச்சி, எதிர்காலத்திலும் அதேபோல் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

English summary

Kalyan Jewellers shares have soared over 40% in just five trading sessions(எகிறி அடிக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள்): Kalyan Jewellers Shares latest news in tamil.

Read More

Previous Post

ரேணுகா விடுதியில் சேதி அதுவா? டெல்லி பின்னணியா?

Next Post

EPFO அம்னெஸ்டி திட்டம்: நிறுவனங்களுக்கு அருமையான வாய்ப்பு! லீகல் பிராப்ளத்திலிருந்து தப்பிக்க சூப்பரான வழி! | EPFO Amnesty Scheme 2026: know the full details of the scheme

Next Post
EPFO அம்னெஸ்டி திட்டம்: நிறுவனங்களுக்கு அருமையான வாய்ப்பு! லீகல் பிராப்ளத்திலிருந்து தப்பிக்க சூப்பரான வழி! | EPFO Amnesty Scheme 2026: know the full details of the scheme

EPFO அம்னெஸ்டி திட்டம்: நிறுவனங்களுக்கு அருமையான வாய்ப்பு! லீகல் பிராப்ளத்திலிருந்து தப்பிக்க சூப்பரான வழி! | EPFO Amnesty Scheme 2026: know the full details of the scheme

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin