Last Updated:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை விரைவில் ஒரு முட்டைக்கு ₹7 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் சிங்கராஜ் தெரிவித்தார்.
வரலாறு காணாத வகையில், முட்டை கொள்முதல் விலை 6 ரூபாய் 60 காசுகளாக உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து புதிய உச்சமாக 6 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீவன மூலப்பொருட்களின் விலை, மின்கட்டணம் மற்றும் பண்ணை பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், முட்டை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ், தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலும் முட்டை நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேவை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சோயா, மக்காச்சோளம், புண்ணாக்கு, தவிடு உள்ளிட்ட தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் பண்ணை பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால் முட்டை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தற்போதைய சந்தை நிலவரத்தைப் பார்க்கும்போது, நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை விரைவில் ஒரு முட்டைக்கு ₹7 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் சிங்கராஜ் தெரிவித்தார்.


