ஜோகூர் பாரு:
நடைபெற்று முடிந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் ம.இ.கா. (MIC) அபார வெற்றி பெற்று, தங்களுக்கு இன்னும் இந்தியச் சமூகத்தின் ஆதரவு பலமாக இருப்பதை நிரூபித்துள்ளது.
அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளின்படி, பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியின் அங்கத்துவக் கட்சியான ம.இ.கா. கஹாங், புக்கிட் பத்து, கெமேலா மற்றும் பெர்லிங் ஆகிய 4 தொகுதிகளையும் தன்வசப்படுத்தியுள்ளது.
கடும் போட்டி நிலவிய பெர்லிங் (Perling) சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா. வேட்பாளர் பி. பன்னீர்செல்வம் 32,062 வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாக்காத்தான் ஹரப்பான் (PH) வேட்பாளர் 28,749 வாக்குகளையும், பார்ட்டி பெர்சாமா மலேசியா (PBM) வேட்பாளர் 2,810 வாக்குகளையும் பெற்றுத் தோல்வியடைந்தனர்.
அதேநேரம் கெமெலேவில் போட்டியிட்ட ஜோகூர் மாநில ம.இ.கா தொடர்பு குழு தலைவரான ரவீன்குமார் மகத்தான வெற்றியை பெற்றார்.
மேலும் புக்கிட் பத்துவில் குமரனும் கஹாங்கில் ருகேந்திரனும் வெற்றி பெற்றனர்.
இதன் மூலம், காலையிலேயே ம.இ.கா. தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்த நம்பிக்கை உண்மையகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



