Last Updated:
இந்த சுவாரஸ்யமான நடனப் போட்டி டென்னிஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இணையத்தில் வைரலானது.
ஜோகோவிச்சும், சபலென்காவும் போட்டி போட்டுக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்கி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டென்னிஸ் நட்சத்திரங்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் (Novak Djokovic), பெலாரஸின் அரினா சபலென்காவும் (Aryna Sabalenka) ஆடுகளத்திலேயே நகைச்சுவை நடனம் ஆடுவதற்கு பெயர்போனவர்கள்.
இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் போட்டியின் போது மைதானத்தில் தங்களது வெற்றி நடனங்களை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் சவால் விடுத்துக் கொண்டாடினர். ஜோகோவிச்சின் நடனத்திற்குப் பதிலளிக்கும் விதமாக சபலென்கா, மைக்கேல் ஜாக்சனின் ‘த்ரில்லர்’ பாடலுக்கு நடனமாடி வைரலானார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் போது, ஜோகோவிச் தனது முதல் சுற்று வெற்றியைக் கொண்டாடும் வகையில் படிக்கட்டுகளில் ஏறி நடனத்தை வெளிப்படுத்தி, இதனை உங்களால் வெல்ல முடியாது என சபலென்காவிற்கு ஒரு நகைச்சுவையான சவாலையும் விடுத்தார்.
இதற்குச் சற்றும் குறையாத சபலென்கா, தனது முதல் சுற்று வெற்றிக்குப் பிறகு மைக்கேல் ஜாக்சனின் ‘த்ரில்லர்’ பாடலுக்கு அசத்தலான முறையில் நடனமாடி பதிலடி கொடுத்தார். இந்த சுவாரஸ்யமான நடனப் போட்டி டென்னிஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இணையத்தில் வைரலானது.


