இரத்தினபுரியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியிலே இவ்வாறு சந்தேகநபர்கள் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.
உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 43 வயதுக்குட்பட்ட இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

