• Login
Thursday, July 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ரயிலில் ’’ஹனிமூன் கோச்’’: அலங்காரத்தால் எழுந்த சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
July 9, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || ரயிலில் ’’ஹனிமூன் கோச்’’: அலங்காரத்தால் எழுந்த சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





நந்திகிராம் எக்ஸ்பிரஸ் (Nandigram Express) ரயிலின் முதல் வகுப்பு (1st AC) குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்றில், பூக்கள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுச் சொத்தான ரயிலைப் பொழுதுபோக்கு மையமாக மாற்றியதற்கும், பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கும் மக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


சம்பவம் என்ன?


  2026  ஜூலை 6, அன்று, நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தம்பதியினர், ஆன்லைன் மூலம் தனியார் அலங்கார நிறுவனம் ஒன்றை அணுகி, தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த முதல் வகுப்பு ஏசி அறையை அலங்கரிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதன்படி, ஜால்னா (Jalna) ரயில் நிலையத்தில் அந்த அலங்காரப் பணியாளர் எவ்வித அனுமதியுமின்றி ரயிலுக்குள் நுழைந்து, அறையை அலங்கரித்துள்ளார்.


இந்த அறையில் இதயம் வடிவிலான அலங்காரங்கள், சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்கள், பூக்கள் மற்றும் ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்ததுடன், மேல் படுக்கையில் “I Love You” என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தியது.


அதிகாரி இடைநீக்கம்: சம்பவத்தின் போது கடமையில் இருந்த தலைமை டிக்கெட் பரிசோதகர் (CTI) கிரிஷ் குமார், பாதுகாப்பு விதிமீறல் மற்றும் கடமை தவறியமைக்காக உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


வழக்கு பதிவு: அனுமதியின்றி ரயிலுக்குள் நுழைந்து அலங்காரம் செய்த அலங்காரப் பணியாளர் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நிர்வாகத்தின் விளக்கம்: “பயணிகள் தனியார் அலங்கார நிறுவனத்தை அணுகியது மற்றும் அந்நிறுவனப் பணியாளர் அனுமதியின்றி ரயிலுக்குள் நுழைந்தது கடுமையான பாதுகாப்பு விதிமீறலாகும். இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் ‘எக்ஸ்’ (X) தளத்தில் தெரிவித்துள்ளது.


நெட்டிசன்களின் கடும் எதிர்ப்பு


இந்தச் செயலுக்குப் பொதுமக்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், “இந்தியர்களின் முட்டாள்தனம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ரயில் என்பது பொதுச்சொத்து, இதைப் புரிந்துகொள்ளும் பொது அறிவு கூட பலருக்கு இல்லை. சம்பந்தப்பட்ட தம்பதியினர் மற்றும் அலங்காரப் பணியாளர் மீது கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


பாதுகாப்பு குறித்த அச்சம்


மகாராஷ்டிராவைச் சேர்ந்த ‘ரஹத் ரூம் டெக்கரேஷன்’ (Rahat Room Decoration) என்ற நிறுவனம் இந்த அலங்காரத்தைச் செய்துள்ளது. இத்தம்பதியினர் அவுரங்காபாத்திலிருந்து ஜால்னா ரயில் நிலையத்திற்கு காரில் வந்து, அங்கிருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயிலில் ஏறியுள்ளனர். முதல் வகுப்பு ஏசி பெட்டி போன்ற அதீத பாதுகாப்பு கொண்ட இடத்திற்குள், வெளிநபர் ஒருவர் எப்படி எளிதாக நுழைய முடிந்தது என்பது, ரயில்வேயின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.



Read More

Previous Post

ஹனுமன் ஜெயந்தி வழிபாடு

Next Post

வயநாடு நிலச்சரிவில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்பு : பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது | India News (இந்தியா செய்திகள்)

Next Post
வயநாடு நிலச்சரிவில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்பு : பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது | India News (இந்தியா செய்திகள்)

வயநாடு நிலச்சரிவில் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்பு : பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin