ஆனால், EPF திட்டம் 2026 என்ற புதிய திட்டத்தின் கீழ், மத்திய அரசு அடிப்படைச் சம்பள உச்சவரம்பை அவ்வப்போது அறிவிக்கும். தற்போது, இந்த தொகை ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியரின் உண்மையான ஊதியம் எவ்வளவு இருந்தாலும், இந்த அடிப்படை வரம்பான ரூ. 15,000-ல் இருந்து மட்டுமே நிறுவனத்தின் கட்டாயப் பங்களிப்பு கணக்கிடப்படும். அதாவது, 15,000-ல் 12 சதவீதம் ரூ.1,800 ஆகும். ஊழியர் சம்பளத்தில் இருந்து ₹1,800 அதற்கு இணையாக நிறுவனமும் ரூ.1,800 மட்டுமே தங்கள் பங்களிப்பாகச் செலுத்தும்.


