Last Updated:
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி, நார்வே முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஐந்து முறை சாம்பியனான பிரேசிலை வீழ்த்தி, நார்வே முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நியூஜெர்சி மைதானத்தில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பலம் பொருந்திய பிரேசில் உடன் நார்வே மோதியது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், நார்வேயின் ஹாலண்ட் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 79ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் ஹாலண்ட் மற்றொரு கோல் அடிக்க நார்வே அணி 2-க்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றது.
அதே சமயம், உலகக்கோப்பையில் நார்வே வீரர் ஹாலண்ட் அடித்த கோல்களின் எண்ணிக்கை 7 ஆக உயர, அதிக கோல் அடித்தவர்களுக்கான கோல்டன் பூட் பட்டியலில் மெஸ்ஸி மற்றும் எம்பாப்பேவுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டார். கூடுதல் நேரத்தின் பிற்பகுதியில் பிரேசில் வீரர் நெய்மர் பெனால்டி கிக் மூலம் ஆறுதல் கோல் அடித்த நிலையில், நார்வே 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.
ஐந்து முறை சாம்பியனாக இருந்தாலும், நார்வேவை ஒரு முறை கூட தோற்கடிக்காத பிரேசில் இம்முறையும் வாய்ப்பைத் தவறவிட்டு தொடரை விட்டே வெளியேறியது. இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நெய்மர் அறிவித்துள்ளார். உலகக்கோப்பையில் நார்வே உடனான போட்டியில் பிரேசில் தோல்வி அடைந்த நிலையில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 34 வயதான நெய்மர், பிரேசில் அணிக்காக 130 போட்டிகளில் விளையாடி 80 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Jul 06, 2026 12:36 PM IST


