Last Updated:
பாஜகவின் கோட்டையாகத் திகழும் பங்கிப்பூர் தொகுதியில் வென்ற பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், அண்மையில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிகார் மாநிலத்தில் பங்கிப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் கண்டு வெறும் 3 புள்ளி 34 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.
அந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடாதது, அக்கட்சியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக கூறப்பட்டது.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், பங்கிப்பூர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து போரிங் ரோடு சௌக்கில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று பிரசாந்த் கிஷோர் வழிபாடு நடத்தினார்.
பாஜகவின் கோட்டையாகத் திகழும் பங்கிப்பூர் தொகுதியில் வென்ற பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், அண்மையில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Jul 06, 2026 12:25 PM IST
பங்கிப்பூர் இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் பிரசாந்த் கிஷோர் – பிகார் அரசியலில் புதிய பரபரப்பு


