• Login
Monday, July 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காலையிலேயே 10000 சரிந்தது.. தங்கம் , வெள்ளி விலை இன்று எவ்வளவு மாற்றம் தெரியுமா? | Gold, silver prices today — 6 July: Check retail rates of 22K gold, 999 silver in chennai

GenevaTimes by GenevaTimes
July 6, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
காலையிலேயே 10000 சரிந்தது.. தங்கம் , வெள்ளி விலை இன்று எவ்வளவு மாற்றம் தெரியுமா? | Gold, silver prices today — 6 July: Check retail rates of 22K gold, 999 silver in chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Velmurugan P

Time
Updated: Monday, July 6, 2026, 10:47 [IST]

சென்னை : உலகளாவிய சாதகமான சூழல் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மிகத் தீவிரமாக உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு தணிந்திருத்தல் ஆகியவற்றின் காரணமாக, கடந்த வாரத்தில் இருந்தே இந்தியா முழுவதும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. நேற்று ஞாயிறு என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 1120 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.1,08,480க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.140 குறைந்து ரூ.13560க்கு விற்பனையாகிறது.

Gold silver prices today 6 July Check retail rates of 22K gold 999 silver in chennai

தங்கத்தின் விலை என்பது இந்தியாவில் மக்களின் வாங்கும் திறன், நாணயத்தின் மதிப்பு ஆகிவற்றை தாண்டி, சர்வதேச பொருளாதார காரணிகளும் உள்ளன. ஈரான், இஸ்ரேல், ரஷ்யா, சீனா உள்பட பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா எடுக்கும் அரசியல், வணிகம் சார்ந்த முடிவுகளும் தங்கத்தின் விலையை தீர்மானிக்கிறது. அதேபோல் சர்வதேச பங்கு சந்தை, இந்திய பங்கு சந்தை, கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீது உலகின் பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் முதலீடு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி இன்று மகாராஷ்டிராவில் மாவட்ட கலெக்டர்.. வான்மதி ஐஏஎஸ் சாதனை பின்னணி

ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி இன்று மகாராஷ்டிராவில் மாவட்ட கலெக்டர்.. வான்மதி ஐஏஎஸ் சாதனை பின்னணி

உலகில் இந்தியா அதிகப்படியாக தங்கத்தை இறக்குமதி செய்து வந்ததால், நாட்டின் அன்னியசெலவாணி இருப்பு கடுமையாக குறைந்து வந்தது. இதனை தடுக்க பிரதமர் மோடியே தங்கத்தை வாங்குவதை குறைக்குமாறு வேண்டுகோள் வைத்தார். அதேபோல் மத்திய அரசும், தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டது.

கடந்த வாரம் ஈரான் போர் முடிவு காரணமாக தங்கம் விலை அதிரடியாக சரிவு கண்டது. இந்தச் சூழலில் உலகளாவிய சாதகமான சூழல் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மிகத் தீவிரமாக உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு முற்றிலும் தணிந்துள்ளது. இதனால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் ஜூலை 3 அன்று பவுனுக்கு ரூ.1,200 என உயர்ந்து. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 என அதிகரித்தது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,700-க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,09,600-க்கும் வெள்ளிக்கிழமை விற்பனையானது .

 தமிழக அமைச்சர் வன்னியரசு பேசியிருப்பது தேச விரோதம்.. பாஜக கடும் எதிர்ப்பு.. விஜய்க்கு கோரிக்கை

தமிழக அமைச்சர் வன்னியரசு பேசியிருப்பது தேச விரோதம்.. பாஜக கடும் எதிர்ப்பு.. விஜய்க்கு கோரிக்கை

இதேபோல் 24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.174 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,956-க்கு விற்பனையானது. வெள்ளி ஜூலை 3 நிலவரப்படி கிராமுக்கு ரூ.5 என விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனையானது.

ஆனால் ஜூலை 6ம் தேதியான இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 1120 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.1,08,480க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.140 குறைந்து ரூ.13560க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 250க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி 10 ஆயிரம் குறைந்து 250000க்கு விற்பனையாகிறது

English summary

The price of gold has dropped by ₹1,120 per sovereign today; ornamental gold is being sold at ₹1,08,480 per sovereign, while the price per gram has decreased by ₹140 to ₹13,560. The price of silver has fallen by ₹10,000 per kilogram, with one kilogram of silver currently selling at ₹2,50,000.

Read More

Previous Post

Gold Price Drop | வார தொடக்கத்திலேயே தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post

மகளிர் டி20 உலகக்கோப்பை : 7 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
மகளிர் டி20 உலகக்கோப்பை : 7 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா | Sports News (விளையாட்டு செய்திகள்)

மகளிர் டி20 உலகக்கோப்பை : 7 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin