ஹார்முஸ் நீர்ச்சந்தியில் சுங்க வரி வசூலிப்போம் என்று ஈரான் போர் தொடங்கியதில் இருந்து ஈரான் அவ்வப்போது சொல்லி வருகிறது. ஆனால், இதில் மற்ற நாடுகளுக்கு உடன்பாடு இல்லை.
காரணம், ஹார்முஸ் நீர்ச்சந்தி இயற்கையாகவே அமைந்த உலகத்திற்கான பொது சொத்து ஆகும்.
ஆனால், பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக அமைதி மன்றத்தில் ஈரான் தூதர் அப்தோல்ரேசா ரஹ்மானி ஃபாஸ்லி ஹார்முஸ் நீர்ச்சந்தியில் ஈரான் சுங்க வரி வசூலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியுள்ளதாவது…
“ஹார்முஸ் நீர்ச்சந்தி எங்கள் நாட்டின் எல்லையோரக் கடல் பகுதியின் ஒரு அங்கமாக இருப்பதால், அங்குப் பயணிக்கும் கப்பல்களுக்கு நாங்கள் நிச்சயமாகச் சேவை கட்டணம் வசூலிப்போம். இந்த நடவடிக்கையை “சுங்கக் கட்டணம்’ என்று குறிப்பிடக் கூடாது.
இந்த புதிய ஏற்பாடுகள் ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியிலான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும், கப்பல்களின் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கும் மட்டுமேயாகும்.

