
மகளிர் சைக்கிள் ஓட்டப் போட்டி: சாதித்த வடமேல் மாகாணம்
50-வது தேசிய விளையாட்டு விழா – 2026-க்குச் சமகாலமாக நடைபெற்ற மகளிர் சைக்கிள் ஓட்டப் போட்டியில், வடமேல் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏ. எம். தினேஷா தில்ருக்ஷி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சிற்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போட்டியை, அவர் 2 மணித்தியாலங்கள் 16 நிமிடங்கள் 03 விநாடிகளில் (Hand Timing) நிறைவு செய்தார்.
போட்டியின் முடிவுகள் பின்வருமாறு:
முதலிடம்: ஏ. எம். தினேஷா தில்ருக்ஷி (வடமேல் மாகாணம்).
இரண்டாமிடம்: பி. ஏ. எஸ். பிரியதர்ஷினி (வடமேல் மாகாணம்).
மூன்றாமிடம்: ஆகாஷா சந்தமிணி (மேல் மாகாணம்).
மேலும், போட்டியில் சிறந்த ‘இன்டர் மீடியம் ஸ்பிரிண்டர்’ (Inter Medium Sprinter) விருதை வடமேல் மாகாணத்தின் டபிள்யூ. ஆர். மதுமாலி பெர்னாண்டோ வென்றார். இப்போட்டியின் மூலம் வடமேல் மாகாண வீராங்கனைகள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆண்கள் சைக்கிள் ஓட்டப் போட்டி: மேல் மாகாணத்தின் ஆதிக்கம்
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியில், மேல் மாகாணத்தைச் சேர்ந்த எம். அவிஷ்க மடோன்சா (M. Avishka Madonza) முதலிடம் பெற்று வெற்றி வாகை சூடினார். தலா 3 மணித்தியாலங்கள் 56 நிமிடங்கள் 26 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து அவர் இந்த வெற்றியைத் தனதாக்கிக்கொண்டார்.
ஆண்களுக்கான போட்டி முடிவுகள்:
முதலிடம்: எம். அவிஷ்க மடோன்சா (மேல் மாகாணம்).
இரண்டாமிடம்: பி. பி. பி. எம். ஜி. சில்வா (மேல் மாகாணம்).
மூன்றாமிடம்: எச். எம். எஸ். பின்து (வடமேல் மாகாணம்).
சிறப்பு விருதுகள்:
முதல் ஸ்பிரிண்ட் (First Sprint) விருது: நதீஷ ஈஷான் (மேல் மாகாணம்).
இரண்டாவது ஸ்பிரிண்ட் (Second Sprint) விருது: டி. ஏ. சுரேஷ் தரங்க (தென் மாகாணம்).
ஒட்டுமொத்தப் போட்டிகளிலும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியதன் அடிப்படையில், 50-வது தேசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான குழு சம்பியன் பட்டத்தை (Team Championship) மேல் மாகாண அணி தட்டிச் சென்றது.
























