சர்வதேச சந்தையில் தங்கம் சரிந்தாலும், இந்திய உள்நாட்டுச் சந்தையில் (MCX) நிலைமை முற்றிலும் வேறாக உள்ளது. மத்திய அரசு இறக்குமதி வரியை 9% உயர்த்தியதாலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை இந்த ஆண்டில் இதுவரை 11.5% உயர்ந்துள்ளது. ஜனவரி 1 அன்று 10 கிராம் (24 கேரட்) தங்கம் ரூ.1,32,614 ஆக இருந்த நிலையில், ஜூலை 3 தேதியின்படி ரூ.1,47,770 ஆக அதிகரித்துள்ளது.


