இது தவிர, போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் (MIS) ஒரு தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில், ஓய்வூதியத்தைப் போன்றதொரு நிலையான வருமானம் மாதந்தோறும் கிடைப்பதுடன், 5 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு முதலீடு செய்த முழுத் தொகையும் திரும்பக் கிடைக்கிறது. அஞ்சலகத்தின் இத்தகைய பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதோடு, ஒப்பீட்டளவில் நல்ல வருமானத்தையும் பெற முடியும்.


