Last Updated:
சட்டவிரோத திரைப்பட வெளியீடு குறித்து டெலிகிராமிற்கு 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமாக திரைப்படங்கள் வெளியாவது குறித்து விளக்கம் அளிக்க கோரி டெலிகிராம் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகும் புதுப்படங்கள், அன்றைய தினமோ, அல்லது, அடுத்த ஒரு சில நாட்களிலோ டெலிகிராம் செயலியில் சட்டவிரோதமாக வெளியாகிறது. இதனை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டவிரோதமாக திரைப்படங்கள் வெளியாவது குறித்து விளக்கம் அளிக்க கோரி டெலிகிராம் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், காப்புரிமை விதிமீறல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து 15 நாட்களில் அறிக்கை தரவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்மையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த புகாரில், மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டது.
Delhi,Delhi,Delhi


