Last Updated:
மம்தா பானர்ஜியின் கருத்தால் மனவேதனை அடைந்த சந்த்ரிமா பட்டாச்சார்யா, திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து சந்த்ரிமா பட்டாச்சார்யா ராஜினாமா செய்துள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. இந்நிலையில், கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்து வந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரதா பக்ஷி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பதவிக்கு கடந்த ஜூன் 3ஆம் தேதி சந்த்ரிமா பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டார்.
மம்தா பானர்ஜியின் நெருங்கிய தோழியான இவர், பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ராஜினாமா தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய சந்த்ரிமா பட்டாச்சார்யா, டி.எம்.சி. பவனை எதிர் தரப்பிடம் தான் ஒப்படைத்துவிட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்தால் மனவேதனை அடைந்ததாகக் கூறினார்.
“நேற்று என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். திரிணமூல் பவனில் ஒரு சம்பவம் நடந்தது. அதன்பிறகு, மம்தா ஜி என்னிடம் தொலைபேசியில் பேசினார். “நீங்கள் திரிணமூல் பவனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டீர்கள்” என்று அவர் என்னிடம் கூறினார். இது எனக்கு மனவருத்தத்தை அளித்தது. இதைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என சந்த்ரிமா பட்டாச்சார்யா தெரிவித்தார்.
#WATCH | Kolkata, West Benagl: After resigning from Mamata Banerjee’s TMC, Chandrima Bhattacharya says, “You saw what happened yesterday. An incident happened at Trinamool Bhavan. After that, Mamata ji spoke to me over phone. She told me “you handed over Trinamool Bhavan to… pic.twitter.com/uGEtRGIk7d
— ANI (@ANI) July 4, 2026
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 58 பேர் கட்சி அலுவலகத்தை பூட்டி, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Jul 04, 2026 10:13 PM IST


