பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வரும் செப்டம்பருக்குள் 2 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பமடைந்து, ‘வலுவான எல் நினோ’ நிகழ்வாக மாறும் என ஐநா-வின் உலக வானிலை அமைப்பு அறிவித்துள்ளது. வழக்கமாக எல் நினோ நிகழ்வுகள் 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றி, 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். இந்த நிகழ்வால் இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் வறட்சி ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்..


