ஈரானிய தூதுவர்களை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டதாக வெளியான செய்திகளை இஸ்ரேல் கடுமையாக நிரகாரித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளின் போது, ஈரானிய தூதுவர்களை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டதாக இரு முக்கிய அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் திட்டம்
இந்த செய்திகளில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும் அந்நாட்டின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் ஆகியோரை இலக்கு வைக்க இஸ்ரேல் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஊடக அறிக்கைகளை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் கற்பனையானவை என்று கூறி இஸ்ரேல் வன்மையாக மறுத்துள்ளதுடன், இவை அனைத்தும் போலிச் செய்திகள் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

