• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

விஜய் உடன் நடந்த மீட்டிங்.. 12 மாவட்டங்கள் ஹேப்பி! சென்னை – திருச்சி எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் முக்கிய பிரச்சனை | Chennai-Trichy Expressway Project Gets Major Push Under CM Vijay: 300km Greenfield Highway to Cut Travel Time to 3 Hours

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
விஜய் உடன் நடந்த மீட்டிங்.. 12 மாவட்டங்கள் ஹேப்பி! சென்னை – திருச்சி எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் முக்கிய பிரச்சனை | Chennai-Trichy Expressway Project Gets Major Push Under CM Vijay: 300km Greenfield Highway to Cut Travel Time to 3 Hours
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விஜய் உடன் நடந்த மீட்டிங்.. 12 மாவட்டங்கள் ஹேப்பி! சென்னை – திருச்சி எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் முக்கிய பிரச்சனை

தமிழ்நாட்டில் சென்னை – பெங்களூர் NE7 எக்ஸ்பிரஸ்வே சாலைக்கு அடுத்தப்படியாக தலைநகரை டெல்டா மாவட்டத்துடன் இணைக்கும் மாபெரும் திட்டத்தை விரைவாக செலுத்தபடுத்த முதல்வர் விஜய் நித்தி அயோக் கூட்டத்தில் பேசியதை அடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது. இதன் மூலம் இத்திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால் இதில் மிகமுக்கியமான பிரச்சனை உள்ளதாக NHAI தெரிவித்துள்ளது.

சென்னை – திருச்சி மத்தியிலான 300 கிலோமீட்டர் தூரத்தை கடக்க தற்போது குறைந்தது 5-6 மணிநேரம் ஆகும் நிலையில், இந்த பயண நேரத்தை வெறும் 3 மணிநேரமாக குறைக்கும் வகையில் பிரம்மாண்ட கிரீன்பீல்ட் எக்ஸ்பிரஸ்வே சாலையை அமைக்கும் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை துறை துவங்கியுள்ளது. சுமார் 20000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தை தமிழ்நாடு அரசின் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலை துறை செயல்படுத்த உள்ளது.

விஜய் உடன் நடந்த மீட்டிங்.. 12 மாவட்டங்கள் ஹேப்பி! சென்னை - திருச்சி எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் முக்கிய பிரச்சனை

இந்த 300 கிலோமீட்டர் சாலையில் தற்போது இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால், பரனூர் டூ செங்கல்பட்டு வரையிலான பகுதியை கடக்க குறைந்தது 2 மணிநேரம் ஆகிறது. மேலும் மொத்த வழித்தடத்தில் பெரும்பாலான பகுதி 4 வழி சாலை என்பதால் பண்டிகை காலம், வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மொத்த 300 கிலோமீட்டர் சாலையை 6 வழியாக மாற்றி தமிழ்நாட்டின் 2வது எக்ஸ்பிரஸ்வே ஆக மேம்படுத்தப்பட உள்ளன.

சென்னை – திருச்சி எக்ஸ்பிரஸ்வே 12 மாவட்டங்களை இணைக்கிறது, மேலும் இந்த சாலை சென்னை சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் இருக்கும் Chennai Peripheral Ring Road இணைத்து Entry/Exit பாயின்ட் ஆக விளங்குகிறது. இதைவிட முக்கியமாக இந்த சாலையில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தற்போதைய 6 மணிநேர பயணம் 3 மணிநேரமாக குறையும்.

இதுக்குறித்து தேசிய நெடுஞ்சாலை துறையின் ப்ராஜெட் டைரெக்டர் சைதன்யா கூறுகையில், மாநில அரசுடன் முதல் கட்ட ஆலோசனை நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் சாலைக்கான நில கையகப்படுத்துதல், சாலை வடிவமைப்பை சரி செய்வது, சுற்றுசூழல் ஒப்புதல் குறித்து பேசப்பட்டதாக தெரிவித்தார். இதன் மூலம் படிப்படியாக அனைத்து பணிகளும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

முக்கிய பிரச்சனை

இத்திட்டத்தை செயல்படுத்த 12 மாவட்டத்தின் வழியாக செல்லும் 300 கிலோமீட்டருக்கும், சுமார் 90 மீட்டர் அளவிலான இடத்தை கையகப்படுத்த வேண்டியது அடிப்படை விஷயமாக உள்ளது. இதில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் இச்சாலையில் பல பகுதி காடுகள் மற்றும் மலை பகுதியில் இருக்கும் காரணத்தால் இத்திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி வாங்குவது மிகவும் கடினம் என NHAI அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் மாநில அரசு இதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதேவேளையில் காவிரி ஆற்றின் நடுவிலும் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதனால் இந்த 20000 கோடி ரூபாய் திட்டத்தில் சுற்றுசூழல் மிக முக்கியமான பிரச்சனையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தலைமையிலான அரசு சுற்றுசூழல் மற்றும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணத்தால் பரந்தூர் திட்டத்தையே கிடப்பில் போட்டு இருக்கும் வேளையில், இத்திட்டத்தை எப்படி கையாளும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சென்னையில் முக்கிய விரிவாக்கம்

இதேவேளையில் நேசிய நெடுஞ்சாலை துறை சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் தாம்பரம் – பரனூர் பகுதி வரையிலான பகுதியை 8 வழி சாலையாக வரிவாக்கம் செய்து வருகிறது. பரனூர் தாண்டி இது 6 வழி சாலையாக மாறும். இந்த 68 கிலோமீட்டர் பகுதியில் சில பிரச்சனைகள் இருந்தாலும், அதுவிரைவில் சரிசெய்யப்பட்டு இந்த வருட இறுதிக்குள் சாலை பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article

English summary

Chennai-Trichy Expressway Project Gets Major Push Under CM Vijay: 300km Greenfield Highway to Cut Travel Time to 3 Hours

Tamil Nadu government under Chief Minister Vijay is fast-tracking the ambitious Chennai-Trichy Expressway project to connect the capital with Delta districts, reducing the current 5-6 hour journey to just 3 hours via a 300km six-lane Greenfield highway estimated at ₹20,000 crore. While NHAI has held key meetings on land acquisition and design, major challenges remain with environmental clearances due to forest and hill areas across 12 districts.

Story first published: Friday, July 3, 2026, 13:44 [IST]

Other articles published on Jul 3, 2026

Read More

Previous Post

Iran | மறைந்த ஈரான் உச்சத் தலைவர் கமேனியின் உடலுக்கு, இந்தியத் தலைவர்கள் மரியாதை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

France | ஏ.சி, ஃபேன் வாங்க முண்டியடித்த மக்கள்… கடும் வெப்ப அலையால் வெடித்த மோதல்! | World News (உலக செய்திகள்)

Next Post
France | ஏ.சி, ஃபேன் வாங்க முண்டியடித்த மக்கள்… கடும் வெப்ப அலையால் வெடித்த மோதல்! | World News (உலக செய்திகள்)

France | ஏ.சி, ஃபேன் வாங்க முண்டியடித்த மக்கள்... கடும் வெப்ப அலையால் வெடித்த மோதல்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin