• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் – தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் – தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரசாங்கத்தின் அண்மைய எரிபொருள் விலை குறைப்பை “மக்களை ஏமாற்றும் நடவடிக்கை” என பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

மன்னார் படுகையில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவள அகழ்வாராய்ச்சி திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கும் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எரிபொருள் விலை 

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“2026 பெப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கும் போது, கச்சா எண்ணெய் பேரல்
ஒன்றின் விலை 72.87 டொலராகக் காணப்பட்டது.

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில | Oil And Natural Gas Exploration Project In Mannar

ஜூன் 29 அன்று இலங்கையில் எரிபொருள்
விலை மாற்றப்பட்ட போது, அதன் விலை 72.55 டொலராகக் குறைவடைந்துள்ளது. உலக
சந்தையில் விலை குறைந்துள்ளதால் அரசால் போருக்கு முந்தைய விலையிலோ அல்லது
அதைவிடக் குறைவான விலையிலோ எரிபொருளை வழங்க முடியும்.



போருக்கு முன் 293 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்று தற்போது
20 ரூபா குறைக்கப்பட்டு 414 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

இது இன்னும் 131
ரூபாவால் குறைக்கப்பட வேண்டும். அதேபோல், 281 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் 25
ரூபா குறைக்கப்பட்டு 382 ரூபாவுக்கு விற்கப்படுவதால், அது இன்னும் 101
ரூபாவினாலும் குறைக்கப்பட வேண்டும்.


இதேபோல் ஒக்டேன் 95 பெற்றோல் 155 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 149
ரூபாவினாலும் குறைக்கப்பட வேண்டும்.

எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணிகள்

அதிக விலைக்கு வாங்கிய எரிபொருள்
இருப்பில் இருப்பதாக அரசு கூறும் காரணம் முற்றிலும் பொய்யானதாகும்.



கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று மத்திய கிழக்கு போர் தொடங்கிய போது,
தன்னிடம் 35 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாகக் கூறிய அரசு, போர்
தொடங்கி 12 நாள்களுக்குள் விலையை ஏற்றியது.

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் - தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில | Oil And Natural Gas Exploration Project In Mannar

ஆனால், இப்போது உலகச் சந்தையில்
விலை குறைந்து இரண்டு வாரங்கள் கடந்தும் அதன் பயனை மக்களுக்கு வழங்க
மறுக்கின்றது.

உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளை வாங்கியதன் மூலம் பெறப்பட்ட
இடைத்தரகுப் பண ஊழலை மறைப்பதற்கே அரசு இவ்வாறு செய்கின்றது.


அத்துடன், இலங்கையின் பொருளாதார தற்சார்புக்கு மிக முக்கியமானதாகக் கருதப்பட்ட
எமது நாட்டு எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்போதைய அரசால் நிறுத்தப்பட்டது
ஏன்?” – என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

காதலியை கரம்பிடித்த நடிகர் அரவிந்த் ஆகாஷ்

Next Post

தந்தை அலி கமேனியின் இறுதிச் சடங்கில்.. மகன் மொஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார்! ஈரானில் ட்விஸ்ட்! | Mojtaba Khamenei to Skip Father’s Funeral Over Security Threats, Says Iran Leader’s Aide

Next Post
தந்தை அலி கமேனியின் இறுதிச் சடங்கில்.. மகன் மொஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார்! ஈரானில் ட்விஸ்ட்! | Mojtaba Khamenei to Skip Father’s Funeral Over Security Threats, Says Iran Leader’s Aide

தந்தை அலி கமேனியின் இறுதிச் சடங்கில்.. மகன் மொஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார்! ஈரானில் ட்விஸ்ட்! | Mojtaba Khamenei to Skip Father's Funeral Over Security Threats, Says Iran Leader's Aide

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin