Last Updated:
பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-ல் வெளியான `ஹம் தில் தே சுகே சனம்` என்ற படத்தின்.. ‘நிம்புடா நிம்புடா’ பாடல் இடம்பெற்றுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் படத்தின் இந்திப் பாடலால் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
ஒடிசா மாநிலத்தில் அண்மையில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான, அரசுப் பாடப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அந்தப் பாடப்புத்தகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-ல் வெளியான `ஹம் தில் தே சுகே சனம்` என்ற படத்தின்.. ‘நிம்புடா நிம்புடா’ பாடல் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் படிக்கும் பாட புத்தகத்தில் சினிமா பாடலா? என சோசியல் மீடியா முழுக்க கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பள்ளி மாணவர்கள் பயிலும், பாடப் புத்தகத்தில் திரைப்படப் பாடல் அச்சிடப்பட்டது எப்படி? என்று கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கை (NEP) கட்டமைப்பின் கீழ், 2026-27 கல்வியாண்டிற்கான.. ஒடிசாவின் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் 1,678 பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தனை பிழைகளுடன் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?. பள்ளி கல்வித்துறையின் இச்செயலால் ஒடிசா முழுக்க பெரும் சர்ச்சையான நிலையில் பிழைகள் சரிசெய்யப்பட்டு.. திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று ஒடிசா மாநில பள்ளி மற்றும் மக்கள் கல்வித் துறை அமைச்சர் நித்யானந்த கோண்ட் தெரிவித்துள்ளார்.
பிழைகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறையான ஆசிரியர் பயிற்சி மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் முன்னாள் இயக்குநர் உட்பட 4 அதிகாரிகள், மூன்று உதவி இயக்குநர்களுடன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாட புத்தக்கத்தில் இடம்பெற்ற ‘நிம்புடா நிம்புடா’ பாடல் தொடர்பாக மற்ற 6 அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Odisha (Orissa)
5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஐஸ்வர்யா ராய் பாடல்.. ஒடிசாவில் வெடித்த சர்ச்சை.. என்ன நடந்தது?


