• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

செமிகண்டக்டர் முதல் குவாண்டம் வரை.. அடுத்த 10 ஆண்டுகளுக்கான இந்தியா – ஜப்பானின் மெகா பிளான்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
செமிகண்டக்டர் முதல் குவாண்டம் வரை.. அடுத்த 10 ஆண்டுகளுக்கான இந்தியா – ஜப்பானின் மெகா பிளான்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 02, 2026 3:25 PM IST

கடந்த ஓராண்டில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே 120 புதிய வணிக ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளது.

ஜப்பான் பிரதமருடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி
ஜப்பான் பிரதமருடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி

ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சி 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரது இந்த பயணத்தின்போது இந்தியா மற்றும் ஜப்பான் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற 16-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர கூட்டு மாநாட்டிற்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, தற்போதைய காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவின் மிக முக்கியத் தூணாக அதிநவீன தொழில்நுட்பக் கூட்டாண்மை உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டார். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு, செமிகண்டக்டர்கள், குவாண்டம் தொழில்நுட்பம், பசுமை ஆற்றல் மற்றும் பாதுகாப்பான விநியோகச் சங்கிலித் தொடர் ஆகிய முக்கியத் துறைகளுக்கான திட்டங்களை இரு நாடுகளும் வெளியிட்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் பல்வேறு அரசியல் அஸ்திரமின்மை நிலவி வரும் இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கைதான் நமது மிகப்பெரிய சொத்து என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனாயே டகாய்ச்சியை “தொலைநோக்கு பார்வை கொண்ட மக்கள் தலைவர்” என்று பாராட்டிய அவர், கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளின் வளர்ச்சியில் ஜப்பான் ஆற்றிய பங்கு விலைமதிப்பற்றது என்றும், இந்த அரசுமுறைப் பயணத்தின் மூலம் இரு நாடுகளின் பார்ட்னர்ஷிப் ஒரு புதிய வரலாற்றுப் பக்கத்தைத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் ஒரு முக்கிய மைல்கல்லாக, பாதுகாப்புத் துறையில் தங்களின் முதலாவது கூட்டு மேம்பாட்டுத் திட்டத்தில் இந்தியாவும் ஜப்பானும் கையெழுத்திட்டுள்ளன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்காக, இரு நாடுகளும் இணைந்து நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்க உள்ளன. மேலும், சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான தங்களின் கூட்டுப் பொறுப்பை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

எரிசக்தி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் செமிகண்டக்டர்கள் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கூட்டுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தியாவில் பெரிய அளவில் பயோ-கேஸ் ஆலைகளை அமைப்பதற்கான ‘இந்தியா-ஜப்பான் பயோ-கேஸ் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே 120 புதிய வணிக ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும், அடுத்த பத்தாண்டுகளில் ஜப்பானில் இருந்து 10 டிரில்லியன் யென் முதலீட்டை ஈர்ப்பதே இலக்கு என்றும் பிரதமர் மோடி விவரித்தார். இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Read More

Previous Post

11 வயது சிறுவன் ஓட்டிவந்த வாகனம் மோதி 8 பிக்குகள் பலி

Next Post

உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடர்.. ரவுண்ட் ஆஃப் 16-க்கு இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் முன்னேற்றம் | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post
உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடர்.. ரவுண்ட் ஆஃப் 16-க்கு இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் முன்னேற்றம் | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடர்.. ரவுண்ட் ஆஃப் 16-க்கு இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் முன்னேற்றம் | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin