Last Updated:
10 வீரர்களுடன் விளையாடிய போதிலும், மாலிக் டில்மேன் அடித்த அற்புத ஃப்ரீ-கிக் கோல் மூலம் அமெரிக்கா வெற்றியை உறுதி செய்தது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகள் திரில் வெற்றி பெற்று சுற்று 16 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
காங்கோ குடியரசு அணிக்கு எதிரான போட்டியின் 7-வது நிமிடத்திலேயே காங்கோவின் பிரையன் சிபெங்கா கோல் அடித்து இங்கிலாந்திற்கு அதிர்ச்சியளித்தார்.
இதனால், முதல் பாதியில் காங்கோ 1-0 என முன்னிலை வகித்தது. எனினும், இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் இரண்டு அபார கோல்களை அடித்து அணியை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.
செனகல் அணிக்கு எதிரான போட்டியில் பெல்ஜியம் அணி 0-2 என பின்தங்கியிருந்த நிலையில், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ரொமேலு லுகாகு, யூரி திலெமன்ஸ் தலா ஒரு கோல் அடித்து 2-2 என சமன் செய்தனர்.
கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில், 125-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை யூரி திலெமன்ஸ் கோலாக மாற்றி, பெல்ஜியம் அணியை வெற்றி பெற வைத்தார்.
அமெரிக்கா, போஸ்னியா இடையேயான போட்டியில் அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகன் முதல் கோல் அடித்த நிலையில், இரண்டாவது பாதியில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
10 வீரர்களுடன் விளையாடிய போதிலும், மாலிக் டில்மேன் அடித்த அற்புத ஃப்ரீ-கிக் கோல் மூலம் அமெரிக்கா வெற்றியை உறுதி செய்தது.


