அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் தோஹாவில் நன்றாகச் சென்று கொண்டிருக்கின்றதாகவும் அணுசக்திப் பிரச்சினை குறித்த விவாதங்கள் விரைவில் தொடங்கும் என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
வர்ஜீனியாவில் உள்ள அமெரிக்கப் படை வீரர்களிடம் உரையாற்றிய பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், இது இன்னும் ஆரம்பக்கட்டம்தான் என்றாலும் பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் நகர்வதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழலில், தொழில்நுட்பப் பேச்சுவார்த்தையாளர்கள் தோஹாவில் ஈரானியர்கள், கத்தார் நாட்டினர் மற்றும் பிறருடன் சில முக்கிய விவரங்கள் குறித்துப் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வலிமை
அமெரிக்க இராணுவத்திற்கு நன்றி தெரிவித்த வான்ஸ், ஈரானுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகள் பலவீனத்தால் அல்ல, மாறாக அமெரிக்காவின் வலிமையால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்.

Image Credit: The New Yorker
மேலும், மீண்டும் குண்டுகளை வீச ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டால் அது ஒரு குறிப்பிட்ட மற்றும் தெளிவான நோக்கத்திற்காக மட்டுமே இருக்கும் என்றும் வான்ஸ் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

