• Login
Wednesday, July 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“தங்கம் வாங்க வேண்டாம்..” ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்.. என்ன இவரே இப்படி சொல்லிட்டாரு! | Why Anand Srinivasan Says Don’t Buy Gold Now: Economy Expert Explains What Could Happen Next

GenevaTimes by GenevaTimes
July 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“தங்கம் வாங்க வேண்டாம்..” ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்.. என்ன இவரே இப்படி சொல்லிட்டாரு! | Why Anand Srinivasan Says Don’t Buy Gold Now: Economy Expert Explains What Could Happen Next
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Business

oi-Vigneshkumar

Time
Published: Wednesday, July 1, 2026, 7:13 [IST]

சென்னை: பல ஆண்டுகளாகவே தங்கத்தை வாங்கச் சொல்லி.. அதன் முக்கியத்துவத்தை எளிய மக்களுக்குப் புரியும்படி விளக்கியவர் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன். ஆனால், அவரே இப்போது திடீரென தங்கத்தை வாங்க வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார். அவர் ஏன் இதுபோல சொல்லியுள்ளார்.. இதற்குப் பின்னணியில் உள்ள உண்மை காரணம் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

ஆனந்த் சீனிவாசன் என்றவுடனேயே பலருக்கும் நினைவுக்கு வருவது அவரது சேமிப்பு டிப்ஸ் மற்றும் தங்கம் சார்ந்த அட்வைஸ்கள். பல ஆண்டுகளாகவே தங்கம் என்பது ஏன் மிடில் கிளாஸ் மக்களுக்கு ரொம்பவே முக்கியமானது என்பதை அவர் தொடர்ச்சியாக எடுத்துக் கூறி வந்துள்ளார். இதனால் பலர் தங்கள் சேமிக்கும் முறையையே கூட மாற்றியுள்ளனர்.

Anand Srinivasan gold personal finance

ஆனந்த் சீனிவாசன்

அப்படிப்பட்ட ஒருவரே இப்போது தங்கத்தை வாங்க வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார். கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை தாறுமாறாகச் சரிந்து வரும் நிலையில், ஆனந்த் சீனிவாசனும் இதுபோல சொல்லியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் ஏன் இதுபோல சொல்லியிருக்கிறார்.. இதற்குப் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், “தங்கம் விலை இன்னும் குறையும். ஏனென்றால் அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரப் போகிறது. இப்படி வட்டி விகிதம் அதிகரிக்கப் போவதால் தங்கம் விலை குறையும். இந்த வட்டி விகித உயர்வு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை மட்டுமே இருக்கும். அடுத்த ஒரு வருடத்திற்குள் வட்டியை மீண்டும் குறைக்க வேண்டிய சூழல் வரும்போது, இப்போது சரிந்து கொண்டிருக்கும் தங்கம் விலை ராக்கெட்டில் ஏறும். தங்கம் விலை வழக்கமாக ரூ.500 ஏறினால் ரூ.1000 உயரும். இப்போது ரூ.3000 சரிந்துள்ளது என்றால் ரூ.6000 வரை உயரலாம்.

ஒரே வாரத்தில் ₹29.4 லட்சம் கோடி காலி.. கதறும் எலான் மஸ்க்.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை

ஒரே வாரத்தில் ₹29.4 லட்சம் கோடி காலி.. கதறும் எலான் மஸ்க்.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை

தங்கம் வாங்க வேண்டாம்!

ஆனால், இது அடுத்த ஓராண்டுக்கு பிறகே நடக்கும். அடுத்த ஓராண்டுக்கு வலி இருக்கும். அமெரிக்காவில் வட்டி விகிதத்தை நிச்சயம் ஏற்றுவார்கள். அப்போது தங்கம் விலை சரிவதால் வலி இருக்கும். உங்களால் அந்த வலியைத் தாங்க முடியாது என்றால், தங்கம் வாங்காதீர்கள். நாம் இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். 24 கேரட் தங்கம் விலை விழவில்லை, 22 கேரட் மட்டுமே விழுந்துள்ளது

வெள்ளியைப் பொறுத்தவரை அதை ஏமாற்றுகிறார்கள். என்ன தான் கிராம் ரூ.240- 245 என்று சொன்னாலும் மார்கெட்டில் நீங்கள் வெள்ளியை விற்கப் போனால் ரூ.210- 220க்கு மேல் வாங்க மாட்டார்கள். எனவே, முதலில் வெள்ளியை உங்கள் கையில் இருந்து எவ்வளவுக்கு வாங்குகிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தையைப் பொறுத்தவரை தற்போது கச்சா எண்ணெய் விலை பிரண்ட் (Brent) வர்த்தகத்தில் $74 என்ற அளவில் உள்ளது. இருப்பினும், இந்தியாவில் ஏறிய பெட்ரோல், டீசல் விலை இன்னும் குறையவில்லை.

இந்திய வீடுகளில் 30,000 டன் தங்கம்! திடீரென விற்று தள்ளிய இந்தியர்கள்.. 50+ டன் காலி.. என்ன காரணம்?

இந்திய வீடுகளில் 30,000 டன் தங்கம்! திடீரென விற்று தள்ளிய இந்தியர்கள்.. 50+ டன் காலி.. என்ன காரணம்?

இன்று ஜப்பானுக்கு வரலாற்று நிகழ்வு. ஜப்பானில் யென் மதிப்பு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது யென் மதிப்பு 162 ஆக சரிந்துள்ளது. இந்த செய்தி ஏற்றுமதியைச் சார்ந்த நாடான ஜப்பானின் நிறுவனங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. யென் மதிப்பு சரிவதால் அவர்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியும்.

அடுத்து என்ன நடக்கும்!

அமெரிக்காவில் வட்டி விகிதத்தை உயர்த்த போவதால் யென் மதிப்பு வீழ்ந்திருக்கிறது. ஜப்பான் மத்திய வங்கி இப்போது வரை வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை என்றாலும் கூட.. அவர்களும் சீக்கிரமே வட்டி விகிதத்தை 1% முதல் 1.5% வரை உயர்த்துவார்கள் என்றே தெரிகிறது. அமெரிக்காவும் வட்டி விகிதத்தை உயர்த்தி, ஜப்பானும் உயர்த்தினால் சிரமம் ஏற்படும் என்பதால், அமெரிக்கா உயர்த்துவதற்கு முன்னரே ஜப்பான் வட்டி விகிதத்தை உயர்த்திவிடும். இது ஏற்பட்ட நஷ்டத்தை ஓரளவு ஈடு செய்யும், இருப்பினும் ஒட்டுமொத்தமாக யென் மதிப்பு பலவீனமாகவே இருக்கும்.

English summary

Expert Anand Srinivasan has advised investors to avoid buying gold for now(தங்கம் விலை சரிவு குறித்து ஆனந்த் சீனிவாசன்): Anand Srinivasan gold could witness a strong rally after the correction phase over the next year.

Read More

Previous Post

புதிய கடற்படைத் தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமனம்

Next Post

நீங்கள் மலாய் இனத்தவராக இருந்தால், மலாய் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்; துன் மகாதீர் | Makkal Osai

Next Post
நீங்கள் மலாய் இனத்தவராக இருந்தால், மலாய் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்; துன் மகாதீர் | Makkal Osai

நீங்கள் மலாய் இனத்தவராக இருந்தால், மலாய் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்; துன் மகாதீர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin