இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
கடற்படை தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ வைஸ் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. (a)


