Last Updated:
மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மழைநீர் சேமிப்பு, சி-295 விமான சாதனை, போர்க் கப்பல் இணைப்பு, தங்கம் வாங்கல் தவிர்ப்பு, எரிபொருள் சிக்கனம், களிமண் விநாயகர் சிலை வழிபாடு உள்ளிட்டவை குறித்து பேசினார்.
தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சி-295 விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. கடற்படையில் மூன்று போர்க் கப்பல்கள் இணைக்கப்பட்டது என ஜூன் மாதத்தில் அடைந்த சாதனைகள் ஒவ்வொரு குடிமகனையும் பெருமிதம் கொள்ளச் செய்யும் என்று தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக சிறிது காலத்திற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறும், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று தேச நலனுக்காக ஒன்றுபட்டு நின்ற நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறினார்.
விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளையே வைத்து வழிபட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
“ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிக்க வேண்டும்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்


