அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் மதுபான விருந்தொன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால் கூர்மையான ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (27) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஹங்குருவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.
கொலையுடன் தொடர்புடைய மெதமுலன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இவ்வாறு கொலை செய்யப்பட்ட இளைஞர், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக இருந்ததுடன், ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞரணி ஊடக செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த மோதலின் போது சந்தேகநபரின் தாயாரும் காயமடைந்து வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் வீரகெட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

