இதன் மூலம், ஆனந்த் அம்பானியின் திருமலை தரிசனம் ஒரு ஆன்மீக நிகழ்வாக மட்டுமல்லாமல், ஒரு சமூக சேவை நிகழ்வாகவும் மாறியுள்ளது. சொல்லப்போனால் இந்த நன்கொடையின் மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் போக்குவரத்து அமைப்பு மேலும் நவீனமயமாக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடனான இந்த ஒத்துழைப்பு, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு வலுசேர்க்கும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எதிர்பார்த்திருக்கிறது.


