Last Updated:
இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் முழுமையாக நிறைவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவிருப்பதாக இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவுத்துள்ளார்.
இந்திய பொருட்களின் இறக்குமதியை தவிர்ப்பதற்காக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% கூடுதல் வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதன் காரணமாக, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் சுணக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், அதிபர் டிரம்ப்ன் இந்திய பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
அண்மையில், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் டிரம்பும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பு, அமெரிக்க அதிபரின் இந்திய பயணத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, புதுடெல்லியில் இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மூத்த அதிகாரிகளை செர்ஜியோ கோர் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் முழுமையாக நிறைவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


