பிலியந்தலை, மகுளுதூவ பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 16 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் படுகாயமடைந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை, நிவந்திடிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
மேலும், உயிரிழந்த மாணவரிடம் ஓட்டுநர் உரிமம் இருந்திருக்கவில்லை என்பதுடன், பின்னால் பயணித்து படுகாயமடைந்த மாணவர் தலைக்கவசம் (Helmet) அணிந்திருக்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவர் பிலியந்தலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் குறித்து பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R

