புதிய அதிநவீன ரொக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட முக்கிய ஆயுத சோதனைகளை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சோதனை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய ஆயுத சோதனைகளை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
போர் பதற்றம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் சற்று தணிந்திருந்தாலும் இன்னமும் ஒரு சுமுகமற்ற சூழலே நிலவி வருகிறது.
இந்நிலையில அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அடுத்த இலக்கு வடகொரியாதான் எனக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து வடகொரியா தனது இராணுவ கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வடகொரியா அண்மையில் சோஹியோன் என்ற 5000 தொன் எடையுள்ள அதிநவீன போர்க்கப்பலைத் தனது கடற்படையில் இணைத்துள்ளது.
இது குறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், எங்களது நீண்ட தூரத் தாக்குதல் திறன் கொண்ட ஆயுதங்கள் அனைத்தும் அதிநவீனமாக மேம்படுத்தப்பட்டவையாக மாற்றப்பட்டிருப்பதை விரைவில் எங்களின் எதிரிகள் அறியச் செய்வோம் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

