• Login
Friday, June 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மின்னல் வேக அரைசதம்! 5வது முறையாக 20 பந்துகளுக்குள் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா புதிய சாதனை! | Abhishek Sharma: Abhishek Sharma Blazes 19-Ball Fifty Against Ireland; Smashes Historic 5th Half-Century in Under 20 Balls

GenevaTimes by GenevaTimes
June 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மின்னல் வேக அரைசதம்! 5வது முறையாக 20 பந்துகளுக்குள் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா புதிய சாதனை! | Abhishek Sharma: Abhishek Sharma Blazes 19-Ball Fifty Against Ireland; Smashes Historic 5th Half-Century in Under 20 Balls
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Friday, June 26, 2026, 21:10 [IST]

பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 20 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு அபிஷேக் சர்மா அரைசதம் அடிப்பது 5வது முறையாகும். இதன் மூலமாக அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பெல்ஃபாஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து அசத்தியது. அயர்லாந்து அணி தரப்பில் டக்கர் 50 ரன்களும், டெலானி 49 ரன்களையும் எடுத்தனர்.

Abhishek Sharma

இந்திய அணி தரப்பில் ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சஞ்சு சாம்சன் 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் இஷான் கிஷன் களம் புகுந்தார். ஆனால் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை அபிஷேக் சர்மா எடுத்து கொண்டார்.

3வது ஓவரிலே 4 பவுண்டரி உட்பட 21 ரன்களை விளாசி தள்ளினார். பின்னர் இஷான் கிஷன் 1 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையில் சரவடியாய் வெடித்த அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற அவர், அரைசதம் அடித்த கையுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

19 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலமாக அபிஷேக் சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 20 பந்துகளுக்கு குறைவாக எதிர்கொண்டு 3 முறைக்கு மேல் எந்த வீரரும் அரைசதம் அடித்ததே கிடையாது. ஆனால் அபிஷேக் சர்மா 5வது முறையாக 20 பந்துகளுக்கு கீழ் எதிர்கொண்ட அரைசதம் விளாசி இருக்கிறார்.

இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா புதிய வரலாற்றை படைத்திருக்கிறார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்த போதும் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா இந்திய அணியின் மானம் காத்துள்ளார். இதனால் அபிஷேக் சர்மாவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

English summary

Abhishek Sharma: Abhishek Sharma Blazes 19-Ball Fifty Against Ireland; Smashes Historic 5th Half-Century in Under 20 Balls

Read More

Previous Post

ட்ரம்பின் எச்சரிக்கை…! இராணுவ பலத்தை அதிரடியாக அதிகரிக்கும் வடகொரியா

Next Post

Silver Price | தொடர் சரிவு.. வெள்ளி வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.. விலை மேலும் குறையுமா? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Silver Price | தொடர் சரிவு.. வெள்ளி வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.. விலை மேலும் குறையுமா? | வணிகம் போட்டோகேலரி

Silver Price | தொடர் சரிவு.. வெள்ளி வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்.. விலை மேலும் குறையுமா? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin