Last Updated:
மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான மகேஷ் தீட்சித், சுனில் ஆச்சார்யா, ரித்விக் ருத்ரா ஆகியோரின் பெயர்கள் புதிய உளவுத்துறை இயக்குநர் பதவிக்கு அடிபட்டன.
மத்திய உளவுத் துறையின் புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் (Mahesh Dixit) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய உளவுத்துறை இயக்குநராக தபன் குமார் நியமிக்கப்பட்டார். அவருக்கு 2024, 2025 ஆம் ஆண்டுகளில் 2 முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவரது பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதி முடிவடையும் நிலையில், அடுத்த இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான மகேஷ் தீட்சித், சுனில் ஆச்சார்யா, ரித்விக் ருத்ரா ஆகியோரின் பெயர்கள் புதிய உளவுத்துறை இயக்குநர் பதவிக்கு அடிபட்டன.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, மகேஷ் தீட்சித்தை புதிய இயக்குநராக தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, மகேஷ் தீட்சித் 2 ஆண்டுகள் இப்பதவியை வகிப்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தெலுங்கானா கேடரைச் சேர்ந்த 1993-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் தீட்சித், 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் காவல் மற்றும் உளவுத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில், ஜம்மு காஷ்மீரில் எந்தவித குழப்பங்களும் ஏற்படாத வகையில் வியூகம் வகுத்து செயல்பட்டவர் மகேஷ் தீட்சித். கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில் உளவுத் துறையின் சிறப்பு இயக்குநராக பதவி உயர்வு பெற்ற மகேஷ் தீட்சித், தற்போது உளவுத்துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Jun 26, 2026 11:19 AM IST


