• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டிரம்ப்-ஐ துளியும் மதிக்காத இஸ்ரேல்.. நீங்க சொல்றதையெல்லாம் கேட்க முடியாது! | Israel Defies US, Vows to Stay in South Lebanon; Netanyahu Says IDF Will Continue Operations, Contradicting Trump Ceasefire Claims

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டிரம்ப்-ஐ துளியும் மதிக்காத இஸ்ரேல்.. நீங்க சொல்றதையெல்லாம் கேட்க முடியாது! | Israel Defies US, Vows to Stay in South Lebanon; Netanyahu Says IDF Will Continue Operations, Contradicting Trump Ceasefire Claims
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Prasanna Venkatesh

Time
Updated: Thursday, June 25, 2026, 12:30 [IST]

இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருந்து வெளியேற மாட்டோம் என்று உறுதியாக அறிவித்துள்ளது. அமெரிக்கா கேட்டாலும் கூட தங்களின் நிலையை மாற்ற மாட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் அதிகாரம் இஸ்ரேலிடம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது. இதேபோல் இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு அமெரிக்கா – இஸ்ரேல் மத்தியிலான 60 நாள் கூட்டம் தடைப்படவும் வாய்ப்புள்ளது.

Israel US trump

இஸ்ரேல் தெற்கு லெபனானை விட்டு வெளியேறாது

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறாது என்று தெளிவாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா கோரினாலும் கூட, தாங்கள் அதைக் கேட்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாக கூறியது. அமெரிக்கா – இஸ்ரேல் மத்தியிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைத் தலைவர் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையிலும், இஸ்ரேல் படைகள் லெபனானில் தீர்க்கமாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய “போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ளது” என்ற கருத்துக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

தெற்கு லெபனானில் தொடரும் தாக்குதல்கள்

தற்போது இஸ்ரேல் தெற்கு லெபனானில் தொடர்ந்து குண்டு வீச்சு நடத்தி வருகிறது. கடந்த சில மணி நேரங்களாக பெய்ரூத் நகருக்கு மேலே இஸ்ரேல் ட்ரோன்கள் பறந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் லெபனானின் தெற்கு பகுதிகளில் பதற்றம் தொடர்கிறது.

இஸ்ரேல் படைகள் லெபனானில் தொடர்ந்து செயல்படும் என்று இஸ்ரேல் தலைமை தெரிவித்துள்ள நிலையில், அங்கு போர் நிறுத்தம் நடைமுறையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது அமெரிக்கா – ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் நிலை என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான சண்டை நிறுத்தம் நடைமுறையில் உள்ளது என்றும், தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன என்றும் கூறியிருந்தார். ஆனால் இஸ்ரேல் தரப்பின் அறிவிப்புகள் இதற்கு முழு முரணாக உள்ளன. இதேபோல் அமெரிக்காவில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்க உள்ளனர்.

இஸ்ரேல் தெற்கு லெபனானை விட்டு வெளியேறாது என்று உறுதியாக இருப்பதால், அமெரிக்காவின் மத்தியஸ்த முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது மீண்டும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மேலும், அமெரிக்காவும் ஈரானும் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்புகளும் தற்போது மங்கியுள்ளன.

அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி இஸ்ரேல் தெற்கு லெபனானில் தொடர்ந்து இருக்கும் என்று அறிவித்துள்ளது, அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கக்கூடும்.

English summary

Israel’s Defense Minister has declared that Israel will not withdraw from South Lebanon even if the US demands it, with Prime Minister Netanyahu and the IDF Chief issuing a joint statement that military operations will continue. This directly contradicts US President Trump’s claims that a ceasefire is holding, as Israel continues bombing southern Lebanon and deploying drones over Beirut.

Read More

Previous Post

தடுத்துவைக்கப்பட்டு தாக்கப்பட்ட லசந்த! அநுர பகிரங்க குற்றச்சாட்டு

Next Post

போஸ்ட் ஆபிஸில் மனைவி பெயரில் ரூ.3,00,000 டெபாசிட் செய்தால், 3 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | Post Office Scheme | வணிகம் போட்டோகேலரி

Next Post
போஸ்ட் ஆபிஸில் மனைவி பெயரில் ரூ.3,00,000 டெபாசிட் செய்தால், 3 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | Post Office Scheme | வணிகம் போட்டோகேலரி

போஸ்ட் ஆபிஸில் மனைவி பெயரில் ரூ.3,00,000 டெபாசிட் செய்தால், 3 ஆண்டுகளுக்கு பின் எவ்வளவு பணம் கிடைக்கும்? | Post Office Scheme | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin