திமுக தயவால் தவெக ஆட்சியா..?
புதிதாக ஒரு வெப்பன் கொண்டுவந்துள்ளார்கள்; அவங்க தயவால்தான் நம்ம ஆட்சி நடக்கிறதாம். மக்கள் தயவால் இந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது; மனசாட்சி உள்ள சக்திகளோட ஆதரவால் இந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது.
உங்கள் தயவால் ஆட்சி நடக்கவில்லை. மக்கள் தயவால் நடக்கிறது. நீங்கள் அனுப்பி வைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? சமூக நீதி அரசு என்று சொன்னீர்கள். உங்கள் அமைச்சரவையில் எத்தனை பட்டியலின அமைச்சர்கள் இருந்தார்கள்? எங்கள் அரசில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர். எங்கள் அரசில் 8 பட்டியலின அமைச்சர்கள் உள்ளனர்.
திமுக தயவால் தவெக ஆட்சி நடக்கிறதா? இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் சுயேச்சையாக முடிவெடுத்து எங்களுக்கு ஆதரவு அளித்தனர்.
நாம் யாருடைய பி டீமும் கிடையாது; Purely Peoples Team
இவ்வாறு அவர் கூறினார்.
மு.க.ஸ்டாலின் செய்கை
இதனைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த பதிலுரையின் நிறைவில் Evils, Evils என்று Devils பேசக்கூடாது என்று கூறி முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த செய்கையை முதல்-அமைச்சர் விஜய் செய்து காட்டியதால் பரபரப்பு நிலவியது.
