குருணாகல், வெல்லாவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (23) காலை சுமார் 6:45 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அப்பெண், உடனடியாக மீட்கப்பட்டு குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நெருங்கிய தனிப்பட்ட உறவில் இருந்த ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது. சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

