ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களின் போக்குவரத்தில் தவறான புரிதல்களைத் தவிர்த்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒரு புதிய தகவல் தொடர்பு வழித்தடம் (Line of communication) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான போக்குவரத்து
இருப்பினும் கடந்த சனிக்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் எந்தவொரு கப்பல்களோ அல்லது வர்த்தகக் கலங்களோ இந்த நீரிணையை நெருங்கக் கூடாது என்றும் மீறி நெருங்கினால் அது அந்தந்தக் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தாக முடியும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
நீர்வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்காக இத்தகைய தகவல் தொடர்பு வழித்தடம் அமைக்கப்பட்டிருப்பது இரு தரப்பிற்கும் இடையே இன்னும் தீர்க்கப்படாமல் எஞ்சியிருக்கும் பரந்த அளவிலான பல முக்கியப் பிரச்சினைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

