• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் கவலையே வேண்டாம்!! இந்தியாவிலும் வந்தாச்சு ‘Tokenised Gold’..!! | Tokenised Gold in India 2026: New Investment Option or Risky Bet? What Every Indian Investor Must Know Before Investing

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் கவலையே வேண்டாம்!! இந்தியாவிலும் வந்தாச்சு ‘Tokenised Gold’..!! | Tokenised Gold in India 2026: New Investment Option or Risky Bet? What Every Indian Investor Must Know Before Investing
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் கவலையே வேண்டாம்!! இந்தியாவிலும் வந்தாச்சு ‘Tokenised Gold’..!!

தங்கம் வாங்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது ஆனால் அதற்கு ஏற்ப லட்சக்கணக்கில் பணம் இல்லை என வருந்துபவர்களுக்காகவே குறைந்த விலையில் தங்கம் வாங்குவதற்கான பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலான மக்கள் தங்கம் என்றாலே தங்க நகை மற்றும் தங்க நாணயம், தங்க கட்டிகள் தான் என்பதோடு நின்று விடுகிறார்கள்.

தங்கத்தை முதலீடு நோக்கத்தில் வாங்கி சேமிப்பதற்கு பல்வேறு புதிய வழிகள் வந்துவிட்டன. இந்தியாவிலேயே கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள், டிஜிட்டல் கோல்டு, அரசு வெளியிடக்கூடிய தங்க பத்திரம் என பல்வேறு வாய்ப்புகள் தங்கத்தில் முதலீடு செய்து தங்கம் விலை உயர்வுக்கு ஏற்ப நமக்கு லாபமீட்டி தருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் Tokenised Gold எனப்படும் புதிய வகையான தங்க முதலீடு பிரபலம் அடைந்து வருகிறது.

தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் கவலையே வேண்டாம்!! இந்தியாவிலும் வந்தாச்சு ‘Tokenised Gold’..!!

டோக்கனைஸ்டு தங்கம் (Tokenised Gold) என்பது பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு செய்யும் ஒரு புதிய முறை. பொதுவாக நாம் தங்கம் வாங்குவது போல் நகையாகவோ அல்லது காயினாகவோ வாங்காமல், டிஜிட்டல் டோக்கன்களாக (Digital Tokens) வாங்கும் முறை இது. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு டோக்கனுக்கும் இணையாக, ஒரு பாதுகாப்பான சர்வதேச லாக்கரில் (Vault) நிஜமான தங்கம் சேமித்து வைக்கப்படும்.

இதில் மிகக் குறைந்த தொகையையும் முதலீடு செய்ய முடியும் என்பதால் தான் உலக அளவில் பிரபலமாகி வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே Gold ETF, டிஜிட்டல் தங்கம், தங்கப் பத்திரங்கள் போன்ற பல டிஜிட்டல் முதலீட்டு வழிகள் உள்ளன. அதில் இருந்து டோக்கன் கோல்டு சற்றே வேறுபடுகிறது. பங்குச்சந்தை நேரக் கட்டுப்பாடு இல்லாமல், ஒரு நாளின் எந்த நேரத்திலும் ஆன்லைனில் எளிதாக இந்த தங்க டோக்கன்களை வாங்கவும் விற்கவும் முடியும். நீங்கள் விரும்பினால் டோக்கன்களுக்கு மாற்றாக தங்க நாணயம், தங்க கட்டிகளாக பெற்று கொள்ளலாம்.

பிளாக்செயின் தொழில்நுட்பம் என்பதால், உங்கள் முதலீட்டு விவரங்களை யாராலும் மாற்ற முடியாது. இருந்தாலும் இந்த முறையில் தங்கம் வாங்குவதற்கு முன்பு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். Gold ETF போன்றவற்றுக்கு இந்தியாவில் செபி போன்ற அரசு அமைப்புகளின் பாதுகாப்பு விதிகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் டோக்கனைஸ்டு தங்கத்திற்கு என்று இன்னும் பிரத்யேகமான அரசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் இல்லை. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைப்பது கடினம்.

இது பிளாக்செயின் அடிப்படையில் இயங்குவதால், கிரிப்டோகரன்சி போன்ற மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் (Virtual Digital Assets – VDA) பிரிவின் கீழ் வரக்கூடும். இதனால், இதிலிருந்து கிடைக்கும் லாபத்திற்கு 30% வரி மற்றும் 1% TDS விதிக்கப்பட வாய்ப்புள்ளது. டிஜிட்டல் முறையில் டோக்கன் இருந்தாலும், வெளிநாட்டு லாக்கரில் நிஜமாகவே தங்கம் இருக்கிறதா என்பதை முதலீட்டாளர்கள் நேரடியாக சென்று சரிபார்ப்பது கடினம்.

டோக்கனைஸ்டு தங்கம் என்பது பார்ப்பதற்கு மிகவும் நவீனமாகவும், வசதியாகவும் இருந்தாலும், இந்தியாவில் இதற்கு முறையான அரசு அங்கீகாரமோ அல்லது சாதகமான வரி விதிப்போ இல்லை. எனவே இதில் முதலீடு செய்வது ரிஸ்க் தான். எனவே, இப்போதைக்கு இந்திய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான Gold ETF அல்லது தேசிய பங்குச்சந்தையின் ஈஜிஆர் எனப்படும் கோல்டு எலக்ட்ரானிக் ரெசிப்ட் போன்ற வழிகளைத் தேர்ந்தெடுப்பதே நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Tokenised Gold in India 2026: New Investment Option or Risky Bet? What Every Indian Investor Must Know Before Investing

தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் கவலையே வேண்டாம்!! இந்தியாவிலும் வந்தாச்சு ‘Tokenised Gold’..!!- Tokenised gold is emerging as a blockchain-based gold investment option in India, allowing investors to buy fractional physical gold digitally with 24/7 trading. However, it operates without SEBI regulation in India, carries harsh 30% VDA taxation (plus 1% TDS), and lacks investor protection frameworks.

Story first published: Saturday, June 20, 2026, 12:35 [IST]

Other articles published on Jun 20, 2026

Read More

Previous Post

குற்றவாளிகளுக்கு செக்… மத்திய அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்திய புதிய செயலி… இதன் சிறப்பம்சங்கள் என்ன?

Next Post

London Train Accident | நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதிய மற்றொரு ரயில்… 80 பேர் படுகாயம்! | World News (உலக செய்திகள்)

Next Post
London Train Accident | நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதிய மற்றொரு ரயில்… 80 பேர் படுகாயம்! | World News (உலக செய்திகள்)

London Train Accident | நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதிய மற்றொரு ரயில்... 80 பேர் படுகாயம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin